Published : 15 Nov 2021 03:52 PM
Last Updated : 15 Nov 2021 03:52 PM
கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 12.54% ஆக உயர்ந்துள்ளது.
மொத்த எரிபொருள் மற்றும் மின் பணவீக்கம் அக்டோபரில் 37.2% ஆக உயர்ந்துள்ளது, இது முந்தைய மாதத்தில் 25% ஆக இருந்தது, அதே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் பணவீக்கம் 12% ஆக கடுமையாக இருந்தது.
மொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் 12.54% ஆக ஐந்து மாத உயர்வை எட்டியது. இது செப்டம்பரில் 10.66% இலிருந்து கணிசமாக உயர்ந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரம், காய்கறிகள் மற்றும் எண்ணெய்கள் மற்றும் ரசாயனங்கள் போன்றவற்றின் விலையில் பரந்த அடிப்படையிலான உயர்வின் காரணமாக பணவீக்கம் உயர்ந்துள்ளது.
மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் அக்டோபரில் 12.54 சதவீதமாக உயர்ந்ததற்கு முக்கியமாக உற்பத்திப் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வே காரணமாக கூறப்படுகிறது.
ஏப்ரல் முதல் தொடர்ந்து ஏழாவது மாதமாக மொத்த பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் பணவீக்கம் 10.66 சதவீதமாகவும், 2020 அக்டோபரில் 1.31 சதவீதமாகம் அதிகரித்தும் உள்ளது.
எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் போன்றவற்றின் விலைகள், முந்தைய ஆண்டின் தொடர்புடைய மாதத்துடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உற்பத்திப் பொருட்களின் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 12.04 சதவீதமாக இருந்தது, முந்தைய மாதத்தில் 11.41 சதவீதமாக இருந்தது.
எரிபொருள் மற்றும் பவர் பேஸ்கெட்டில், செப்டம்பர் மாதத்தில் 24.81 சதவீதமாக இருந்த விலை உயர்வு, அக்டோபரில் 37.18 சதவீதமாக இருந்தது.
செப்டம்பரில் 71.86 சதவீதமாக இருந்த கச்சா பெட்ரோலியப் பணவீக்கம் 80.57 சதவீதமாக இருந்தது.
உணவுப் பொருள்களின் பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் (-) 4.69 சதவீதத்திற்கு எதிராக, அக்டோபரில் (-) 1.69 சதவீதமாக, மாத அடிப்படையிலான உயர்வு கண்டது. காய்கறிகளின் விலை (-) 18.49 சதவீதமாகவும், வெங்காயத்தில் (-) 25.01 சதவீதமாகவும் இருந்தது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 4.48 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது ஒரு மாதத்திற்கு முன்பு 4.35 சதவீதமாக இருந்தது, அதிக செலவுகள், எரிபொருள் மற்றும் பொருட்களின் விலைகள் காரணமாக உணவு பொருட்களின் விலை அதிகரித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT