Published : 17 Mar 2016 09:55 AM
Last Updated : 17 Mar 2016 09:55 AM
ஹைதராபாதில் 5 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச விமான கண்காட்சியை நேற்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.
ஹைதராபாத் சம்ஷாபாத் விமான நிலைய வளாகத்தில் நேற்று சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது. 5 நாட்கள் வரை நடைபெறும் இந்த கண்காட்சியை முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: உலக அளவில் விமான துறையில் நாம் 9-ம் இடத்தில் உள்ளோம். வரும் 2020-ம் ஆண்டில் 3-ம் இடத்திற்கு வருவோம் எனும் நம்பிக்கை உள்ளது. இந்திய விமான துறை மூலம் தினமும் பல லட்சம் பயணிகள் பாதுகாப் பாக பயணம் செய்து வருகிறார் கள் என்று குடியரசு தலைவர் பிரணாப் கூறினார். இந்நிகழ்ச்சி யில் 200 நாடுகளை சேர்ந்த பலவித விமானங்கள் இடம் பெற்றன. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் இறுதி நாள் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச் சியில், தெலங்கானா ஆளுநர் நரசிம்மன், முதல்வர் கே. சந்திர சேகர ராவ், மத்திய விமான துறை அமைச்சர் அஷோக் கஜபதி ராஜூ மற்றும் பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT