Published : 15 Oct 2021 05:39 PM
Last Updated : 15 Oct 2021 05:39 PM
இந்தியா- அமெரிக்கா பொருளாதார மற்றும் நிதிக் கூட்டாண்மைக்கான அமைச்சர்கள் அளவிலான எட்டாவது கூட்டம் வாஷிங்டனில் இன்று நடைபெற்றது.
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஜானெட் யெல்லென் இதற்குத் தலைமையேற்றனர்.
பரந்த பொருளாதாரக் கண்ணோட்டம், கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து மீட்சி, நிதி ஒழுங்குமுறை, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பலதரப்பு ஈடுபாடு, பருவநிலை நிதி, பண மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாதத்திற்கு நிதியளித்தலைத் தடுத்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
இருதரப்பு மற்றும் உலகளாவியப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், இணக்கமான உத்திகள் மற்றும் தீர்வுகளை நோக்கி பாடுபடுவதற்கும், ஒத்துழைப்பை தொடர்வதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் மற்றும் அமெரிக்கக் கருவூலச் செயலாளரின் கூட்டு அறிக்கையை ஏற்றுக்கொண்டு கூட்டம் நிறைவடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT