Published : 28 Sep 2021 01:00 PM
Last Updated : 28 Sep 2021 01:00 PM

80 டாலரை நெருங்கும் கச்சா எண்ணெய்: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

சென்னை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. அதன் பிறகு கரோனா 2-ம் அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-க்கு விற்பனையானது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல்- டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்தநிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ 98.96 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 93.93 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து ரூ 99.15 ஆகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ 94.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய்:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு பீப்பாய் 80 டாலர்களாக உயர்ந்துள்ளது. உலகளாவிய எரிசக்தி நிறுவனங்கள் தங்கள் கையிருப்பில் இருந்து அதிக கச்சா எண்ணெயை விற்பனை செய்துள்ள நிலையில் உற்பத்தி அதிகரிக்க வில்லை. அமெரிக்க கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மூன்று வருட ங்களில் குறைந்தபட்ச கையிருப்பை வைத்துள்ளன.

கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய்க்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை அதிகரிக்கவில்லை. மேலும் சூறாவளி தாக்கியதால் ​​அமெரிக்க வளைகுடா மெக்ஸிகோ பகுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தியை பாதித்தன.இதனாலும் கச்சா எண் ணெய் தேவை அதிரிப்பால் விலை உயர்ந்த வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x