Published : 01 Jun 2014 11:08 AM
Last Updated : 01 Jun 2014 11:08 AM
டி.வி. பொழுதுபோக்கு ஊடகம் என்றாலும் அதிலும் வணிகம் இருக்கிறது. கலை, பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி வணிக ரீதியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும். இந்த வகையில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி எந்த அடிப்படையில் நிகழ்ச்சிகளை உருவாக்குகிறார்கள், அடுத்த கட்டம் என்ன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் பொதுமேலாளர் கே.ஸ்ரீராமிடம் விரிவாக பேசினோம். அந்த உரையாடலிலிருந்து.
புதிய நிகழ்ச்சிகளுக்கான கான் செப்ட்டை எங்கிருந்து எடுக்கிறீர்கள்?
ஸ்டார் குழுமத்தில் இருக்கிறதால் அங்கிருந்து நிறைய ஐடியாக்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் எங்கு என்ன நடக்கிறது. அதை எப்படி இங்கு மாற்ற முடியும் என்பதைப் பார்க்கிறோம். மூன்று மாதத்துக்கு இரண்டு புதிய நிகழ்ச்சிகள் என்பது எங்கள் திட்டம். மேலும், focus group study செய்வோம். உதாரணத்துக்கு ஒரு தொடர் நாடகம் ஆரம்பிக்கப்போவதாக இருந்தால், பொதுமக்கள் நிறைய நபர்களை அழைத்து நிறைய கதைகள் சொல்லுவோம். அதில் பெருவாரியான மக்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம். மக்களுக்கு எந்த சேனல் என்பதைச் சொல்லாமல் அவர்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்வோம்.
இருந்தாலும் ஒரே நிகழ்ச்சியை சீசன் 1,2.... என நீர்த்து போக செய்வதாக உங்கள் டிவி மீது ஒரு அபிப்ராயம் இருக்கிறதே?
பாட்டு, நடனம். இதில் எந்த மாற்றமும் இல்லைதான். எங்களுக் கும் இது தெரியும். ஆனால் ஒவ் வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு ஷோவிலும் புதுமை இருப்பது போல பார்த்துக்கொள்வோம். சிறப்பு விருந்தினர், செட், என எதாவது ஒரு புதுமை இருக்கும்.
தனிப்பட்ட நபர்களை விட நிறு வனம்தான் பெரியது. காபி வித் சுச்சி, காபி வித் அனு, காபி வித் டிடி என தனிப்பட்ட நபர்களை நம்புவது நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பை குறைக்காதா?
இது நிகழ்ச்சியை பொறுத்து மாறுபடும். ஒருவருக்கு ஒருவர் நேரடியாக பேசிக்கொள்ளும் போது இப்படி பேர் வைப்பதுதான் சரியாக இருக்கும். பலபேர் கலந்துகொள்ளும் டாக் ஷோ, ரியால்டி ஷோக்களில் இதுபோல் தனிநபரை மையப்படுத்த முடியாது. அதற்காக அனு இல்லாததால் அந்த நிகழ்ச்சி இல்லை என்று கிடையாது. டி.டி. இருக்கிறதால்தான் இந்த நிகழ்ச்சி என்றும் கிடையாது. அந்த நிகழ்ச்சியின் தன்மை அப்படி.
உங்களுடைய சேனலை மாலை யில் பார்க்கும்போது பார்வை யாளர்களுக்கு ஒரு இமேஜ் உரு வாகிறது. ஆனால் காலையில்? இந்த இமேஜை மாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லையா?
இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். முன்பெல்லாம் காலை, மாலை, இரவு என எந்த வித்தியாசமும் இல்லாமல் இது போன்ற நிகழ்ச்சிகள் இருக்கும். இப்போது காலையில் இரண்டு மணிநேரம் மட்டுமே ஒதுக்கி இருக்கிறோம். கூடிய விரைவில் அதுவும் இருக்காது.
தமிழ்நாட்டில் இருக்கும் மீடியா நிறுவனங்கள் ஒவ்வொரு வகை யான மக்களுக்கும் ஒரு சேனல் என ஒரே குழுமத்தில் பல சேனல் கள் வைத்திருக்கிறார்கள்.. உங்க ளுடையது ஸ்டார் குழுமம். பணம் உள்ளிட்ட எந்த பிரச்சினையும் கிடையாது. இரண்டாவது சேனல் பற்றிய திட்டம் இருக்கிறதா? செய்தி சேனல் ஏன் இன்னும் ஆரம்பிக்கவில்லை?
சேனல் ஆரம்பிப்பதை விட டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க் முக்கியம். இந்த சேனலை இன்னும் நிறைய பேரை பார்க்க வைப்பது ஒரு சவாலாக இருக்கிறது. இந்த சேனலிலே இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் இருக்கிறது என்றாலும் கூட இரண்டாவது சேனல் குறித்த அறிவிப்பு இன்னும் சிலமாதங்களில் வெளியாகும். மேலும் ஸ்டார் வெளிநாட்டு நிறுவனம் என்பதால் இந்திய விதிமுறைப்படி செய்தி சேனல் ஆரம்பிக்க முடியாது.
உங்கள் சேனல் மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களுக்கான சேனலாகவே இருக்கிறது என்ற அபிப்ராயமும் இருக்கிறதே?
பல சேனல்கள் இந்த நிலைமைக்காக காத்திருக்கிறார் கள். நாங்கள் இந்த இடத்தில் இருப்பது மகிழ்ச்சிதான். மேலும் இந்தியா வளர்ந்து வரும் சூழ்நிலையில் மக்கள் அடுத்தடுத்த நிலைக்கு வந்து கொண்டிருக்கும்போது எங்க ளுக்கு இது சாதகம்தான்.
டிவி சேனல்கள் அதிகமாகிவிட் டது. யூ.டியூப் மூலம் டி.வி. நிகழ்ச் சிகள் (விளம்பரம் இல்லாமல்) பார்ப்பது அதிகமாகிவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களே சமூக வலைதளங்கள் மூலம் தங்களது வாடிக்கையாளர்களை உருவாக்கி கொள்கிறார்கள். இந்த சூழ்நிலை யில் உங்களது விளம்பரதாரர் களை எப்படி தக்கவைத்துக் கொள்கிறீர்கள்?
யூ.டியூப் வாடிக்கையாளர் களுக்குக் கூடுதல் வசதிதான். யூ.டியூபில் பார்க்கும் வாடிக்கை யாளர்கள் வேறு. டிஜிட்டல் மார்க்கெட்டிங் வளர்ந்துவந்தாலும் இப்போதைக்கு நிறுவனங்கள், தங்களது விளம்பரங்களைத் தொலைகாட்சியில் கொடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 4ஜி வந்தாலும் கூட அமெரிக்காவில் இன்னும் தொலைக்காட்சி இருக்கிறது. மேலும் நிகழ்ச்சிகள் தரமாக இருக்கும்போது அதில் தங்களது விளம்பரங்கள் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். மேலும் 15 வருடமாக எங்களுக்கு அவர்களிடம் நேரடி தொடர்பு இருக்கிறது.
இன்னும் சில காலத்துக்கு பிறகு டிஜிட்டல் மார்க்கெட்டிங்கும் மொத்தமாக சேர்த்து ஒரு பாக்கேஜாக மாற்றி விளம்பரங்கள் வாங்க வேண்டிய நிலைவரும்.
சிவகார்த்திகேயன், சந்தானம் போன்ற பிராண்ட்களை உரு வாக்கி சினிமாவுக்கு கொடுத்து விட்டீர்கள். இது உங்களுக்கு ரிஸ்க்தானே?
இதில் பெருமை இருந்தாலும் வலியும் இருக்கிறது. இது ரிஸ்க் என்பதற்காக அந்த வேலையைச் செய்யாமல் இருக்க முடியாதே! உலகம் பெரியது. நிறைய திறமையாளர்கள் இருக்கிறார்கள்.
Karthikeyan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT