Published : 24 Jun 2021 11:07 AM
Last Updated : 24 Jun 2021 11:07 AM
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து 98.88 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து 92.89 ரூபாயாக உள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவல் 2-ம் அலை காணப்படுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் விலையை விலையை உயர்த்தி வருகின்றன.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் பெட்ரால்- டீசல் விலை உச்சம் தொட்டன. பின்னர் சற்று குறைந்தது. இந்தநிலையில் பெட்ரோல்- டீசல் விலை மீண்டும் உச்சம் தொட்டு வருகிறது.
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100-ஐத் தாண்டியுள்ளது.
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 98.65 ரூபாய், டீசல் லிட்டர் 92.83 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து 98.88 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து 92.89 ரூபாயாக உள்ளது.
டெல்லியில் இன்று பெட்ரோல், லிட்டர் 97.76 ரூபாய்க்கும், டீசல் லிட்டர்88.30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் இன்று பெட்ரோல், லிட்டர் 103.89 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 95.79 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொல்கத்தாவில் இன்று பெட்ரோல், லிட்டர் 97.63 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT