Published : 29 Apr 2021 02:59 PM
Last Updated : 29 Apr 2021 02:59 PM

பிக்பாஸ்கெட் நிறுவனத்தை வாங்குகிறது டாடா டிஜிட்டல்

புதுடெல்லி 

‘பிக்பாஸ்கெட்’ என்ற பெயரில் செயல்படும் எஸ்ஜிஎஸ் நிறுவனத்தின் 64.3 சதவீத பங்குகளை டாடா டிஜிட்டல் நிறுவனம் வாங்க சிசிஐ ஒப்புதல் தெரிவித்துள்ளது.

எஸ்ஜிஎஸ் நிறுவனத்தின் 64.3 சதவீத பங்குகளை, டாடா டிஜிட்டல் நிறுவனம் வாங்கவும், இன்னோவேட்டிவ் ரீடைல் கான்செப்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ( ஐஆர்சி) நிறுவனத்தின் மீது எஸ்ஜிஎஸ் நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டுக்கும் இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த இணைவின் மூலம், எஸ்ஜிஎஸ் நிறுவனத்தின் மொத்த பங்கில் 64.3 சதவீதத்தை முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை கொள்முதல் மூலம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடவடிக்கைகளில் (பரிவர்த்தனை 1) டாடா டிஜிட்டல் நிறுவனம் கொள்முதல் செய்யும். அதைத் தொடர்ந்து தனியான பரிவர்த்தனை மூலம், எஸ்ஜிஎஸ் நிறுவனம், ஐஆர்சி நிறுவனத்தின் மீதான முழு கட்டுப்பாட்டையும் பெறலாம் (பரிவர்த்தனை 2). பரிவர்த்தனை 1 மற்றும் பரிவர்த்தனை 2 ஆகியவை கூட்டாக முன்மொழியப்பட்ட இணைவு என குறிப்பிடப்படுகின்றன. இந்த இணைவு மூலம் எஸ்ஜிஎஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை டாடா டிஜிட்டல் நிறுவனம் வாங்கி, எஸ்ஜிஎஸ் நிறுவனத்தின் மீதான முழு கட்டுப்பாட்டையும் பெறும்.

டாடா டிஜிட்டல் நிறுவனம், டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம். டாட்டா சன்ஸ் நிறுவனம் டாடா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களை வைத்திருக்கும் இறுதி நிறுவனம். தற்போது டாடா டிஜிட்டல் நிறுவனம் தொழில்நுட்ப சேவைகள் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளது. டாடா சன்ஸ் குழுமம், தனது குழும நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் உணவு மற்றும் பலசரக்கு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தொழிலிலும் ஈடுபட்டுள்ளது.

எஸ்ஜிஎஸ் நிறுவனம் www.bigbasket.com என்ற இணையதளம் மற்றும் செயலி மூலம் இந்தியாவில் பலசரக்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இந்த வெப்சைட் மற்றும் செயலியை ஐஆர்சி நிறுவனம் இயக்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x