Published : 07 Jun 2014 12:06 PM
Last Updated : 07 Jun 2014 12:06 PM
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎஃப்) வட்டி நடப்பு நிதி ஆண்டில் (2014-15) 9 சதவீதமாக உயரும் என தெரிகிறது.
கடந்த நிதி ஆண்டில் (2013-13) பிஎஃப் வட்டி விகிதம் 8.75 சதவீதமாக இருந்தது. 0.25 சதவீத வட்டி உயர்வால் 5 கோடி சந்தாதாரர்கள் பயனடைவர். 9 சதவீத வட்டி அளிக்க இபிஎஃப் நிறுவனம் ஒப்புக் கொள்ளும் என்றே தெரிகிறது. இபிஎஃப்ஓ வசம் ரூ. 5 லட்சம் கோடி உள்ளது. இந்த நிறுவனத்தில் ரூ. 71.95 கோடி முதலீடு வாடிக்கையாளர்களிடமிருந்து வருகிறது.
இது முந்தைய ஆண்டு கிடைத்ததைவிட 16 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆ ரூ. 61.43 கோடி கிடைத்தது. இந்நிறுவனம் வசம் உள்ள நிதியில் 55 சதவீதம் வரை பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT