Published : 22 Jun 2014 01:13 PM
Last Updated : 22 Jun 2014 01:13 PM
ஒரு வெள்ளை அறிக்கை என் றால் புள்ளிவிவரங்கள் இருக்கும். வரவிருக்கும் போக்குகள் பற்றி சுருக்கமாக விவரிப்பார்கள். வாக்கியங்ககள் குறைவாகவும் எண்களை கொண்ட தகவல்கள் அதிகமாகவும் இருக்கும். மொத்தத்தில் துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் மட்டும் வாங்கி சேகரிப்பார்கள்.
ஆனால் வெள்ளை அறிக்கைகள் என் றால் கொள்ளை பிரியம். அதுவும் மார்க் கெடிங் பற்றிய வெள்ளை அறிக்கைகள் எனக்கு சமூகவியல் பாடம் போல சுவை யாகத் தோன்றும். அந்த நம்பிக்கையில் வாங்கிய புத்தகம் தான் The Marketing White book 2014-15. பிஸினஸ் வோர்ல்ட் வருடா வருடம் வெளியிடும் பதிப்புதான்.
வண்ணக் கோர்வையாய் வெளி வந்துள்ள இந்த புத்தகம் சுவையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என நம்பி வாங்கினேன். நம்பிக்கை பொய்க்க வில்லை.
நான்கு பகுதிகள். இந்திய சந்தை வெளி, தலைமுறைகளைப் படித்தல், போக்குகளும் தடங்களும் மற்றும் அவசிய தொடர்புகள் என அழகாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் சிறு சிறு பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய பொருளாதாரமும் சந்தை நிலவரமும் 2013-14 ல் சொல்லிக் கொள்வது போல இல்லை. ஜி.டி.பி. 4.9% என சார்ட்டில் குட்டையாக நிற்கிறது. இன்ன பிற எண்களும் திருப்தி யாக இல்லை. ஆனால் முதல் அத்தி யாயமே சொல்கிறது ஏறுமுகம்தான்; ஆனால் கடினமான பயணம் என்று. இந்த ஐந்து ஆண்டுகள் அரசு செய்யும் பல முக்கிய முடிவுகள் தான் சந்தையை நிர்ணயிக்கும் என்று முடிகிறது கட்டுரை.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் புழக்கம், மின்னணு மூலம் பணப் புழக்கம் என மாறும் இந்தியாவின் பணப்போக்குவரத்தை படம் பிடிக்கிறது அடுத்த கட்டுரை.
இந்திய குடும்பங்கள் பற்றியதை தனிக்கட்டுரையாகச் செய்யலாம். கொடுத்த காசுக்கு இந்த ஒரு அத்தி யாயம் போதும். நம் தேசம் 68% கிராமங்களில் வாழ்கிறது. வளர்ந்த குழந்தைகளுடன் தனிக் குடும்பங்கள் எண்ணிக்கை தான் பெருகி வருகிறது. கூட்டுக்குடும்பங்கள் வடக்கில் 35.3% இருக்க, தெற்கில் 17.9% ஆக தேய்ந்து இருக்கிறது. தன் சம்பளத்தில் தனியாக வாழ்வோர் எண்ணிக்கை தெற்கில் 6.6%, வடக்கில் 2.8% மட்டுமே.
மாத வருமானப் புள்ளி விவரங்கள் பல நாவல்களுக்கு உள்ள செய்திகள் கொண்டவை. ரூ.18,000க்கும் குறைவாக மாத வருமானத்தில் வாழ்பவர் 87.09%. ரூ.18,001- ரூ.1,00,000 மாத வருமானம் கொண்டவர்கள் 11.21%.
ரூ. 1,00,001 முதல் ரூ. 5,00,000 வரை மாத வருமானம் கொண்டோர் எண்ணிக்கை 0.14% மட்டுமே.
0.00001% மக்கள் தான் 99.9999 மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக் கிறார்கள் என்பது சந்தை செய்தி மட்டு மல்ல. ஒரு சமூகவியல் உண்மையும் கூட. வீட்டு உபயோகப் பொருட்களில் அதிக இந்திய குடும்பங்கள் வாங்கிப் புழங்கும் பொருள் எது? மொபைல் போன்ற தனி நபர் பொருட்கள் அல்ல.. வீட்டு உபயோகப் பொருள்..! உங்கள் பதிலை பத்திரமாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பரிசு உண்டு. விடை பின்னால் வருகிறது. வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் புதுச்சேரிக்கு தான் முதலிடம் 32.6% அகில இந்திய எண்ணிக்கை வெறும் 13.7% தான்.
இணைய பயன்பாடு 8% மக்களிடம். அதில் 4.5% பெண்கள் எனும் தகவல் நிறைய யோசிக்க வைக்கிறது.
வெளியே உண்ணும் பழக்கமும், வெளி உணவை வீட்டில் வாங்கி உண் ணும் பழக்கமும் பெருகிவருகிறது- வயது வித்தியாசம் இல்லாமல். தெரிந்த இடத் திற்கு போவதும், நண்பர்கள் சிபாரிசில் இடத்தை தேர்வு செய்வதும் தான் முக்கிய அம்சங்கள். அதி பணக்காரர்கள் சொகுசு செலவுகள் எங்கெங்கு எப்படியெப்படி செய்கி றார்கள் என்று பார்த்தால் 43% ஆபரணங் களில் தான் எனத் தெரிகிறது. அடுத்து வருவது விலை உயர்ந்த மொபைல்கள் தான். சுற்றுலாச் செலவுகளும் கணிச மாக உயர்ந்துள்ளது. அயல் நாட்டு சுற்றுலா மையங்களில் அதிகம் தேர்ந் தெடுக்கப்படுபவை ஐரோப்பாவும் நியூசி லாந்தும்தான். சொகுசு வீட்டில் என்னென்ன செலவுகள் செய்கிறார்கள்? நீச்சல் குளம், மினி தியேட்டர், ஜிம், ஸ்பா இத்யாதி இத்யாதி...!
சில்லறை வணிகம் பற்றி கூறுகையில் 2012ல் 93% பாரம்பரிய சில்லறை வணிக மும், 6.9% கார்பரேட் சில்லறை வணிகமும், 0.1% ஆன்லைன் சில்லறை வணிகமும் உள்ளன என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இது 2021ல் 80% பாரம்பரிய சில்லறை வணிகமும், 14.7% கார்பரேட் சில்லறை வணிகமும், 5.3% ஆன்லைன் சில்லறை வணிகமும் என மாறும் என்று கணிக்கிறார்கள்!
ஃபேஸ்புக் பயன்பாடு நான்கு ஆண்டு களில் 7 மடங்கு பெருகியுள்ளது. 7.1 கோடி பேர் இருக்கிறார்கள். ஆன்லைனில் ரயில்வே டிக்கெட் பதிவு செய்வது 6 மடங்கு பெருகியுள்ளது. தற்போது 11.6 கோடி மக்கள் ஆன்லைனில் பதிவு செய்கிறார்கள். வருமான வரியை ஆன்லைனில் கட்டுபவர்கள் 1.6 கோடி பேர். 4 ஆண்டுகளில் 8 மடங்கு வளர்ச்சி.
ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு தற் போது 4 கோடி என்றால் 2020ல் 45 கோடி ஆகும் என்கிறார்கள்.
ஆன்லைனில் என்னென்ன வாங்கு கிறார்கள்? எலக்ட்ரானிக் பொருள்கள் 30%, ஆடைகள் மற்றும் வாழ்வுமுறை சார்ந்த பொருட்கள் 30%, புத்தகங்கள், இசை, வீடியோக்கள் 15% என்கிறது.
பெட்டிக்கடைக்காரர்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை & விற்பனைத்துறை இயக்குநர்கள் வரை அனைவருக்கும் தேவையான தகவல்கள் கொண்ட இந்த புத்தகத்தை அரைகுறையாக விமர்சிப்பது அநீதி. அதனால் இதன் அடுத்த பகுதி அடுத்த வாரம்.
இந்திய குடும்பங்களில் அதிகம் புழங் கும் பொருள் என்ன என்று கேட்டிருந் தேன். ஒரு சின்ன க்ளூ...சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலை படத்தில்தான் அந்த விடை இருக்கிறது!
gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT