Published : 04 Jun 2014 07:02 PM
Last Updated : 04 Jun 2014 07:02 PM

பி.எஃப். வரம்பு: புதிய அறிவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பிஎஃப்) நிறுவனங்களின் பங்களிப்பை குறைந்தபட்சமாக நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மாதந்தோறும் பிடித்தம் செய்யும் அதிகபட்ச கட்டாயத் தொகை அளவு ரூ.6,500 ஆக உள்ளது. ஊழியர்கள் பெறும் மாதாந்திர அடிப்படைச் சம்பள அடிப்படையில் கணக்கிடப்பட்டு கட்டாய தொகை வரம்பு ரூ.6,500 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

பி.எஃப் சட்டத்தின்படி ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவீதம் செலுத்த வேண்டும். இதில் ஊழியரின் பங்களிப்போடு தங்களின் பங்களிப்பாக 12 சதவீதத்தை நிறுவனம் செலுத்த வேண்டும். இதில் அதிகபட்ச கட்டாய வரம்பாக ரூ.6,500 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இத்தொகையை ஊழியர்களும் நிறுவனமும் விரும்பும் பட்சத்தில் அதிகரித்துக் கொள்ள முடியும். ஆனால் இவ்விதம் செலுத்தும் தொகையின் குறைந்தபட்ச அளவை நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ள புதிய விதிமுறை வழிவகுத்துள்ளது.

இப்போது பணியில் சேரும் இளம் தலைமுறையினர் பி.எஃப்-பில் பணம் போடுவதைவிட வீடு வாங்கி கடன் அடைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்புதிய விதிமுறை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று முன்னணி தகவல் தொழில்நுட்பத் துறையின் மனித வள பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x