Published : 25 Jun 2014 09:04 AM
Last Updated : 25 Jun 2014 09:04 AM
# உலக மாம்பழ உற்பத்தியில் இந்தியா 50 முதல் 65 சதவீத பங்கு வகிக்கிறது. இந்தியாவில் 2.3 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு ஆண்டுக்கு சராசரியாக 12.75 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
# பூக்காத மா மரங்களை பூக்கச் செய்வதற்கு பிப்ரவரி மாதத்தில் 0.5% யூரியா கரைசல் (அ) 1% பொட்டாசியம் நைட்ரேட் கரைசலை தெளித்தால் அடுத்த பருவத்தில் மரங்கள் பூக்கத் தொடங்கும்.
# வெட்டி வேர் ஒரு புல் வகைத் தாவரம். இதன் வேரிலிருந்து எடுக்கப்படும் வாசனை எண்ணெயானது சோப்பு, வாசனைத் திரவியங்கள், அழகுச் சாதனப் பொருட்கள் மற்றும் வாசனைப் புகையிலைத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
# கேரளம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வெட்டிவேர் குறிப்பிட்ட பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது.
# வறண்ட நிலப் பகுதிகளில் சாகுபடி செய்ய பெருநெல்லி, சப்போட்டா, இலந்தை போன்ற பழக்கன்றுகள் மிகவும் ஏற்றவை.
# நல்ல தரமான தென்னங்கன்றுகள் கிடைக்க வேண்டுமானால், முற்றிய விதைத் தேங்காயை மண்ணில் விதைப்பதற்கு முன்பாக சுமார் 1 மாத காலம் காற்றில் உலர வைக்க வேண்டும். அதன் பிறகு மணலில் 2 மாதங்கள் வரை உலர்த்தப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT