Published : 18 Feb 2021 02:25 PM
Last Updated : 18 Feb 2021 02:25 PM

தற்சார்பு இந்தியா; தொலை தொடர்பு, நெட்வொர்க்கிங் பொருட்கள் தயாரிப்புக்கு நிதியுதவி: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி

தொலை தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் பொருட்களுக்காக ரூ.12,195 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் தொலைத் தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்புகளை அதிகரிக்க, உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் வழிவகுக்கும் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நிதி உதவி அளிக்கும்.

மேலும் தொலை தொடர்புத் துறையில் முதலீடுகளை ஈர்க்கவும், நெட்வொர்க்கிங் பொருட்களை இந்தியாவில் தயாரிப்பதையும் ஊக்குவிக்கும்.

உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், இந்தியாவில் தொலை தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.

4 ஆண்டு காலத்தில், ஒட்டுமொத்த முதலீட்டில் குறைந்தபட்ச வரம்பை எட்டும் நிறுவனங்கள் இத்திட்டத்துக்கு தகுதியானவையாகும்.

ஒட்டு மொத்த முதலீட்டை ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். இது ஆண்டு ஒட்டுமொத்த வரம்புக்கு உட்பட்டது.

உலகளாவிய தொலைத் தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்பு ஏற்றுமதிகள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நடைபெறுகின்றன. இதை இந்தியாவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு திட்டத்தின் ஆதரவுடன், சர்வதேச நிறுவனங்களின் முதலீட்டை ஈர்த்து தொலை தொடர்பு உற்பத்தி திறனை இந்தியா அதிகரிக்க முடியும்.

அதே நேரத்தில் தொலைத் தொடர்பு தயாரிப்பில் உள்நாட்டு நிறுவனங்களையும் ஊக்குவிக்க முடியும். இதன் மூலம் தொலை தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா மிகப் பெரிய நாடாக உருவெடுக்கும்.

தற்சார்பு இந்தியா உத்திகளின் கீழ் இந்தியாவின் உற்பத்தி திறனை அதிகரித்து, ஏற்றுமதியை அதிகரிக்க இத்திட்டம் உதவும். உற்பத்தியுடன் கூடிய இந்த ஊக்குவிப்பு திட்டத்தை தொலை தொடர்புத் துறை உட்பட பல துறைகளில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது.

இத்திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்ளுக்கு குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ.10 கோடி. இதற்கான ஊக்குவிப்பு சலுகைகள் 7 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை இருக்கும்.

மற்ற நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேலான குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ.100 கோடி. ஊக்குவிப்பு சலுகை 6 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை. குறிப்பிட்ட வரம்பை விட, அதிக முதலீடு செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களின் விண்ணப்பதாரர்கள் வெளிப்படையான முறையில் தேர்வு செய்யப்படுவர்.

இத்திட்டத்தின் மூலம் தொலை தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்பில் இந்தியா உலகளாவிய மையமாக மாறும். 5 ஆண்டுகளில் இந்தியாவின் தொலைத் தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்புகளின் உற்பத்தி ரூ. 2 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கப்பட்ட மதிப்பு கூட்டு வசதியுடன், தொலை தொடர்பு தயாரிப்புகள் உற்பத்தியில் இந்தியா தனது போட்டின் தன்மையை அதிகரிக்கும்.

இத்திட்டம், ரூ.3,000 கோடிக்கும் மேல் முதலீட்டை ஈர்க்கும் மற்றும் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை மிக அதிகளவில் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x