Last Updated : 06 Nov, 2015 08:59 AM

 

Published : 06 Nov 2015 08:59 AM
Last Updated : 06 Nov 2015 08:59 AM

8000 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது நிப்டி

இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிவுடன் முடிந்தன. கடந்த ஐந்து வாரங்களில் இல்லாத அளவுக்கு நேற்று சரிவைச் சந்தித்தன. நேற்றைய வர்த்தகத்தில் பிஎஸ்இ 248 புள்ளிகள் சரிந்து 26304 புள்ளியிலும் நிப்டி 84 புள்ளிகள் சரிந்து 7955 புள்ளியிலும் முடிவடைந்தன. கடந்த அக்டோபர் 1-ம் தேதி இருந்த நிலையில் பங்குச்சந்தைகள் உள்ளன.

அமெரிக்க மத்திய வங்கி அடுத்த மாதம் வட்டியை உயர்த்தப்போவதாக அறிவித்தது மற்றும் பிஹார் மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் ஆகிய காரணங்களால் பங்குச் சந்தை சரிந்தது.

5 கட்டங்களாக நடந்த தேர்தல் நேற்று முடிவடைந்தது. நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பும், வரும் ஞாயிறு அன்று தேர்தல் முடிவுகளும் வெளியாக இருக்கிறது. தேர்தல் முடிவுகள் குறித்த அச்சம் காரணமாகவும் பங்குச்சந்தைகள் சரிந்தன.

பிஹார் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக அரசு வெற்றியடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போதுதான் மாநிலங்கள வையில் அதிக உறுப்பினர்கள் அந்த கட்சிக்கு கிடைப்பார்கள். அதன் பிறகுதான் ஜிஎஸ்டி உள்ளிட்ட மசோதாக்களை நிறை வேற்ற முடியும்.

கடந்த 9 வர்த்தக தினங்களில் 8 வர்த்தக நாட்களில் இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 பங்குகளில் 23 பங்குகள் சரிவை சந்தித்தன. கோல் இந்தியா, என்டிபிசி, ஹீரோமோட்டோ கார்ப், ஐடிசி, எம் அண்ட் எம் மற்றும் மாருதி சுசூகி ஆகிய பங்குகள் உயர்வை சந்தித்தன.

புதன்கிழமை வெளியான அசோக் லேலண்ட் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்புக்கு இல்லாததால் அந்த பங்கு 5.8 சதவீதம் வரை சரிந்தது.

துறை வாரியாக பார்க்கும் போது ரியால்டி குறியீடு 2.63 சதவீதம் சரிந்தது. அதனை தொடர்ந்து ஹெல்த்கேர், வங்கி தொழில்நுப்ட குறியீடுகள் சரிந்து முடிந்தன. ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் குறியீடுகளும் 1.5 சதவீத சரிவை சந்தித்தன.

புதன்கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டா ளர்கள் 33.16 கோடி ரூபாய் அளவுக்கு நிகர முதலீடு செய்தார்கள்.

மேலும் சரியலாம்

முக்கியமான சப்போர்ட் நிலையான 8000 புள்ளிகளுக்கு கீழே நிப்டி சரிந்துள்ளது. வாராந்திர முடிவில் 7900 புள்ளிகளுக்கு கீழ் நிப்டி சரியும் பட்சத்தில் 7500 புள்ளிக்கு வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள். முக்கிய நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x