Published : 01 Feb 2021 12:02 PM
Last Updated : 01 Feb 2021 12:02 PM

மத்திய பட்ஜெட் 2021: மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கு நிதி ஒதுக்கீடு- முக்கிய அம்சங்கள்; நிர்மலா சீதாராமன் உரை

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

கரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மக்களவையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். அவர் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

* முன்பு அறிவிக்கப்பட்ட சுயசார்பு இந்தியா திட்டங்கள் 5 மினி பட்ஜெட்களுக்கு சமமானது.

* சுயசார்பு திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான பல அறிவிப்புகள் உள்ளன.

* கோவிட் தடுப்பூசி தயாரிப்பு பணிகளுக்காக பட்ஜெட்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நாட்டின் சுற்றுச்சூழலை மேம்படுத்த பழைய வாகனங்களை திரும்பப் பெறுவதற்கான திட்டம் வகுக்கப்படும்.

* நாடு முழுவதும் ஊட்டச்சத்தை அதிப்படுத்துவதற்கான திட்டமும் வகுக்கப்படும்.
* இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்.

* ஜவுளித்துறைய ஊக்கப்படுத்த மிகப்பெரிய அளவில் முதலீட்டுப் பூங்கா அமைக்கப்படும்.

* அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

* மூன்று ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய மூன்று அம்சங்களில் சுகாதாரத் துறை கவனம் செலுத்தி வருகிறது.

* கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான நிதி அதிகரிப்பு

* சுயசார்பு இந்தியா சுகாதார திட்டத்திற்கு 64,180 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

* மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கு நிதி ஒதுக்கீடு

* தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய நெடுங்சாலைகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x