Published : 03 Jan 2021 11:07 AM
Last Updated : 03 Jan 2021 11:07 AM
மூலப் பொருள்கள் விலை உயர்வு காரணமாக விவசாயத்துக்கு முக்கியத் தேவையாக திகழும் மோட்டார் பம்ப் செட் உற்பத்தித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பம்ப் செட் உற்பத்திக்குத் தேவையான தாமிரம், துருப்பிடிக்காத எஃகு, ஸ்டீல் கம்பிகள், எலெக்ட்ரிகல் ஸ்டீல், சிஆர்சிஏ தகடுகள், அலுமினியம் ஆகியவற்றோடு பேக்கிங்கிற்கு உதவும் காகிதம், மற்றும் ரெசின் உள்ளிட்டவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இவற்றின் விலை உயர்வு காரணமாக பம்ப் செட்களின் விலையை 15 சதவீத அளவுக்கு உயர்த்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் அம்சமாகும்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து பம்ப் செட்களை வாங்குவதற்குப் பதிலாக இந்திய தயாரிப்புகளை வாங்க ஆர்வம்காட்டி வருகின்றன. இந்நிலையில் விலை உயர்வு ஏற்றுமதி வர்த்தகத்தை பாதிக்கும் என்று கோவையைச் சேர்ந்த எஸ்ஐஇஎம்ஏஅமைப்பின் தலைவர் கே.வி.கார்த்திக் தெரிவித்துள்ளார்.
விலை உயர்வு குறித்து தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐஇஎம்ஏ), இந்திய பம்ப் உற்பத்தியாளர் சங்கம் (ஐபிஎம்ஏ), ராஜ்கோட் இன்ஜினீயரிங் சங்கத்தின் (ஆர்இஏ) தலைவர்கள் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். மூலப் பொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT