Published : 27 Oct 2015 10:00 AM
Last Updated : 27 Oct 2015 10:00 AM
சீனாவின் கோடீஸ்வரரின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு உயர்ந்துள்ளார்.
வாண்டா குழுமத்தின் நிறுவனரான வாங் ஜியான்லினின் சொத்து மதிப்பு ஓராண்டில் 1,320 கோடி டாலரிலிருந்து 3,000 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் சொத்து மதிப்பு 1,700 கோடி டாலர் அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் தெரியவந்துள்ளது. உலகின் இரண்டாவது பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவில் சமீபகாலமாக தேக்க நிலை நிலவுகிறது.
இருப்பினும் இவரது நிறுவனங்களில் இரு துணை நிறுவனங்களின் லாபம் காரணமாக இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு ஐஸ்லாந்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) விட அதிகமாகும்.
2006-ம் ஆண்டு அமெரிக்காவின் ஏஎம்சி என்டர்டெயின்மென்ட் சினிமா அரங்கை 260 கோடி டாலருக்கு இவர் வாங்கியதிலிருந்து இவரது புகழ் பரவத் தொடங்கியது. இதுவரை முதலிடத்திலிருந்த அலிபாபா நிறுவனர் ஜாக்மா-வை இண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டுவிட்டு முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அலிபாபாவின் சொத்து மதிப்பு 2,180 கோடி டாலராகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT