Published : 08 Dec 2020 07:07 AM
Last Updated : 08 Dec 2020 07:07 AM
சீனாவுக்கு 2020-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து செய்யப்பட்ட ஏற்றுமதி 16 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேநேரம் சீனாவில் இருந்து இந்தியா செய்த இறக்குமதி 13 சதவீதம் குறைந்துள்ளது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் எல்லை பிரச்சினை தீவிரமாக இருக்கும் பட்சத்திலும் இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
சீனா வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டின் கடந்த 11 மாதங்களில், இந்தியாவில் இருந்து சீனாவுக்கு செய்யப்
பட்ட ஏற்றுமதி 16 சதவீதம் உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பு நேரத்திலும், சீனாவுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஆனால், சீனாவில் இருந்து இந்தியா செய்துள்ள இறக்குமதி இதே காலத்தில் 13 சதவீதம் குறைந்துள்ளது.
இரு நாட்டுக்கும் இடையிலான எல்லை விவகாரத்தைக் காரணமாக வைத்து சீனப் பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய அரசு தடை விதித்தது. ஆனால் இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தகத்தை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் பெய்ஜிங் எடுக்கவில்லை என்று சீன ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும், சீனாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதி குறைந்ததற்கு கரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட நுகர்வு சரிவு ஒரு காரணமாகும் எனக் கூறப்படுகிறது. சீனாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்திருந்தாலும் வர்த்தகப் பற்றாக்குறை அதிகமாகவே இருக்கிறது.
நடப்பாண்டில் சீனாவில் இருந்து இந்தியா 59 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்துள்ளது. ஆனால், இந்தியாவிடம் இருந்து சீனா 19 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்துள்ளது.
கடந்த 2019-ல் இந்தியா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 10 ஆண்டுகளில் முதல் முறையாக குறைந்தது. இந்தியாவுக்கு சீனா 12-வது பெரிய வர்த்தக கூட்டாளி நாடாக விளங்குகிறது. இந்திய அரிசி சீனாவில் அதிகளவில் விற்பனை
யாகி வருவதாகவும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT