Published : 27 Nov 2020 01:47 PM
Last Updated : 27 Nov 2020 01:47 PM

இணையதளம் வாயிலாக வருமான வரி தாக்கல் செய்ய பிரத்யேக அடையாள எண் அவசியம்

புதுடெல்லி,

இணையதளம் வாயிலாக வருமான வரி தாக்கல் செய்ய பிரத்யேக அடையாள எண் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமான ஐசிஏஐ, சான்றிதழ்/வரி தணிக்கை அறிக்கை உள்ளிட்டவற்றை நிறுவனத்தின் இணைய தளம் (www.icai.org) வாயிலாக மேற்கொள்ளும்போது பிரத்யேக அடையாள எண்ணை கட்டாயமாக்கி 2019 ஆகஸ்ட் 2-ஆம் தேதியிட்ட அரசிதழில் அறிவித்திருந்தது. போலி கணக்கு தணிக்கையாளர்கள் சான்றளிப்பதைத் தவிர்ப்பதற்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

வருமான வரித்துறை, அரசாங்க முகமைகள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்தத் துறையின் இணையதளம், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் இணைய தளத்துடன் இணைந்து பிரத்யேக அடையாள எண்ணை சரிபார்க்க ஒருங்கிணைந்துள்ளது.

2020 ஏப்ரல் 27ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக வருமான வரி தாக்கல் செய்யும்போது பிரத்யேக அடையாள எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x