Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

நிதி ஆண்டு இறுதிக்குள் பொருளாதாரம் மீண்டு விடும்: மத்திய நிதி அமைச்சகம் தகவல்

புதுடெல்லி

இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதாகவும் நிதி ஆண்டின் இறுதியில் கரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டிவிடும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி மற்றும் சேவை துறையின் கொள்முதல் இண்டெக்ஸ் உயர்ந்து வருகிறது. சுங்கக் கட்டணங்கள், பெட்ரோல், டீசல் விற்பனை, ஆரோக்கியமான சம்பா சாகுபடி, ரயில் போக்குவரத்து, ஆட்டோமொபைல் விற்பனை, ஈ-வே பில், ஜிஎஸ்டி வரி வருவாய் என அனைத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. கரோனா காரணமாக ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து நாடு வேகமாக மீண்டு வருகிறது என நிதி அமைச்சகமும் பொருளாதார விவகாரங்கள் துறையும் தெரிவித்துள்ளன.

மக்களின் நுகர்வும் மீண்டு வந்து கொண்டிருக்கிறது. கரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாம் அலையின் தாக்கத்தை சமூக இடைவெளியைப் பின்பற்றுவதன் மூலம் வெகுவாகக் குறைக்கும் முயற்சிகளில் இருக்கிறோம். இதைத் தொடர்ந்து பின்பற்றி வரும் பட்சத்தில் இந்தியப் பொருளாதாரம் கரோனாவுக்கு முந்தைய நிலையை நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிடிபி வளர்ச்சியும் ஆரோக்கியமான நிலையை அடையும் எனவும் கூறியுள்ளது. ஐஎம்எஃப் இந்திய ஜிடிபி 2021-22 நிதி ஆண்டில் 8.8 சதவீதமாக இருக்குமென கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் முக்கிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது என்றும் கவலை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x