Published : 23 Oct 2015 09:22 AM
Last Updated : 23 Oct 2015 09:22 AM
இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் நிதி உதவி செய்ய முன்வந்திருக்கிறது. புல்லட் ரயில் திட்டத்துக்கு 1,500 கோடி டாலர் (ரூ 97,680 கோடி) செலவாகும் என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. இந்த நிதியை ஒரு சதவீத வட்டிக்கு கொடுக்க ஜப்பான் முன்வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
மும்பை அகமதாபாத் இடை யேயான 505 கிலோமீட்டர் திட்டத்துக்கு ஜப்பான் நிதி உதவி செய்கிறது. இந்த திட்டம் தொழில்நுட்ப ரீதியிலும் சரியாக இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் தனக்கு லாபம் கிடைக்கும் என்றும் முடிவெடுத்திருக்கிறது.
கடந்த மாதம் டெல்லி - மும்பை இடையேயான 1,200 கிலோமீட்டர் அதிக வேக ரயில் திட்டத்தை மதிப்பீடு செய்வதற்கான ஒப்பந்தம் சீனாவுக்கு கிடைத்தது. ஆனால் இதுவரை அந்த திட்டத்துக்கு கடன் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் புல்லட் ரயில் திட்டத்தை மதிப்பீடு செய்ததோடு அத்திட்டத்துக்கு ஜப்பான் மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்தையில் பல நிறுவனங்கள் அதிக வேக தொழில்நுட்பத்தை நமக்கு தருகிறார்கள். ஆனால் தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி என்ற இரண்டும் வரும் போது ஜப்பானுக்குதான் கொடுக்க முடியும் என்று இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் ஏ.கே மிட்டல் தெரிவித்தார்.
இந்தியாவின் முக்கியமான நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களை அதிக வேக ரயில்கள் மூலம் இணைப்பதுதான் திட்டம். இவை மொத்தம் 10,000 கிலோமீட்டர்கள் ஆகும்.
ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று புல்லட் ரயில் திட்டத்துக்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்தது. இந்த திட்டம் மூலம் தற்போதைய ஏழு மணி நேர பயண நேரத்தை 2 மணி நேரமாக குறைக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த 11 புதிய குகைகள் உருவாக்கப்பட வேண்டி இருக்கும். அதில் ஒன்று கடலுக்கு அடியில் என்றும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து ஜப்பானிய நிறுவனம் மேலும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த திட்டத்துக்கான அறிக் கையை இந்தியாவிடம் கொடுத்து விட்டது. இதுகுறித்து இந்தியா முடிவெடுக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் தகவல் தொடர்பு அதிகாரி கூறினார்.
மோடியின் ``மேக் இன் இந்தியா’’ திட்டத்தின் ஒரு பகுதி யாக இந்தியாவுடன் இணைய நாங்கள் (ஜப்பானிய நிறுவ னங்கள்) ஆர்வமாக இருக்கிறோம், இதுகுறித்து மேலும் தகவல்கள் தெரிவிக்க இயலாது என்று ஜப்பானிய தூதரக அதிகாரி தோஷிஹிரோ யமாகோஷி தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் இந்தோனேசி யாவில் அமைக்கப்பட இருக்கும் திட்டத்தை சீனாவினால் ஜப்பான் இழந்தது. அதனால் இந்த திட்டம் ஜப்பானுக்கு முக்கியமானதாகும். இந்தோனேசிய திட்டத்துக்கு சீனா எந்தவிதமான பிணையும் இல்லாமல் 500 கோடி டாலர் கொடுக்க முன்வந்தது.
இன்னும் சில வாரங்களில் இந்த திட்டம் குறித்து முடிவெடுக் கப்படும் என்று இந்திய ரயில்வே துறை உயரதிகாரி ஒருவர் தெரி வித்தார். இந்த திட்டம் நிறை வேற்ற அதிக பணம் தேவைப் படும், பல துறைகள் சம்பந்தப் பட்டிருக்கின்றன. அதனால் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். இதற்கு முன்பு இந்திய ரயில்வே இவ்வளவு பெரிய திட்டத்தை நிர்வகித்ததில்லை என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT