Published : 13 Oct 2020 07:41 AM
Last Updated : 13 Oct 2020 07:41 AM
இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி தொடர்ச்சியாக 6வது மாதமாக ஆகஸ்ட் மாதத்திலும் சரிவு கண்டது.
செப்டம்பரில் நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் 7%-ஐக் கடந்து 7.34% என்று செப்டம்பரில் இருந்தது. ஆகஸ்டில் உணவுப்பொருட்களின் விலை 9.05% அதிகரித்தது, ஆனால் செப்டம்பரில் இது 10.68% அதிகரித்துள்ளது.
ஆண்டுக்கு ஆண்டுக் கணக்கில் தொழிற்சாலை உற்பத்திக்கான குறியீடு ஆகஸ்டில் 8% சரிவு கண்டுள்ளது. ஆனால் தொடர் சரிவு என்றாலும் ஜூலை சரிவான 10.8%-ஐ ஒப்பிடும் போது சரிவில் சற்று குறைந்துள்ளது என்றே கூற வேண்டும்.
கரோனா லாக்டவுன் கொண்டு வரப்பட்ட மார்ச் மாதத்திலிருந்து தொழிற்சாலை உற்பத்தி கடுமையாகக் குறைந்து கொண்டே வருகிறது. மார்ச் மாதத்தில் 18.7% சரிவு கண்டது. ஏப்ரலில் 57.3%, மே மாதத்தில் 33.4%. சரிவு கண்டது, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை தொழிற்சாலை உற்பத்தி தற்போது 25% சரிவு கண்டுள்ளது.
உணவுப்பொருட்கள் விலையேற்றத்தினாலும் போக்குவரத்து செலவுகளினாலும் ஏற்பட்ட பணவீக்க விகித அதிகரிப்பினால் மத்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் கொள்கை சீராய்வுக் கூட்டத்தில் வட்டி விகிதக் குறைப்பு கடினம் என்று தெரிவித்தது.
கேர் ரேட்டிங்ஸின் தலைமை பொருளாதாரவாதி மதன் சப்நாவிஸ் கூறும்போது, “நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் எதிர்பார்த்த 6.4% ஐ விடவும் அதிகரித்து 7.4% ஆக உள்ளது. அக்டோபரிலும் இது 6-7% ஆகவே இருக்கும். காய்கறிகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து அழுத்தத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.
அனைத்துத் துறை உற்பத்திகளும் ஆகஸ்டில் சரிவு கண்டன, உணவு, மருந்து, வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் என்று அனைத்து உற்பத்தியும் சரிவு கண்டது, இது ஆச்சரியமே என்கிறார் சப்நாவிஸ். உலோக மூலப்பொருள், புகையிலை, போக்குவரத்து உபகரண உற்பத்தி மட்டுமே அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சுரங்கத் துறை ஆகஸ்டில் 9.8% சரிவு கண்டது. தயாரிப்புத் துறை உற்பத்தி 8.6% சரிவு கண்டது. மின்சாரத் துறை உற்பத்தி 1.8% சரிவு கண்டுள்ளது. மூலதனப்பொருட்கள், முதன்மைப் பொருட்கள், நுகர்வோர் பொருட்கள் என்று அனைத்து உற்பத்திகளும் 10-15% வரை பின்னடைவு கண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT