Published : 03 Oct 2020 01:20 PM
Last Updated : 03 Oct 2020 01:20 PM
மோட்டார் வாகன தொழிலுக்கு தேவையான தரமான எஃகுகளை உள்நாட்டிலேயே பெற்று தற்சார்பு இந்தியா திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என கார் தயாரிப்பு நிறுவனங்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.
மோட்டார் வாகன மற்றும் எஃகு தொழில் துறையினரிடம், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், ‘‘ மோட்டார் வாகன மற்றும் எஃகு தொழில் துறையினரிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினேன். மோட்டார் வாகனத்துறைக்கு, எஃகு முக்கியமான பொருள் என்பதால், எஃகு விநியோகத்தில் எஃகுத்துறை முக்கிய பங்காற்றுகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.
பல பிரிவுகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், மோட்டார் வாகனம் மற்றும் எஃகு துறையை ஊக்குவிக்கும் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
‘‘நமது எதிர்கால உள்நாட்டு தேவைகளை நிறைவேற்றும் வகையில், நமது எஃகு துறை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், இது மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தி, வேலை வாயப்புகளை மிகப் பெரிய அளவில் உருவாக்கும்’’ என அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
மோட்டார் வாகன தொழிலுக்கு தேவையான தரமான எஃகுகளை உள்நாட்டிலேயே பெற்று தற்சார்பு இந்தியா திட்டத்தை உறுதி செய்வதற்கான திட்டங்கள் குறித்தும் நாங்கள் ஆலோசித்தோம் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT