Published : 03 Oct 2020 12:53 PM
Last Updated : 03 Oct 2020 12:53 PM

கரோனா ஊரடங்கு; இந்தியாவின் மொத்த வர்த்தகம் செப்டம்பர் மாதத்தில் சரிவு

புதுடெல்லி

நாட்டின் ஏற்றுமதி கடந்த செப்டம்பர் மாதத்தில் 27.40 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஏற்றுமதி 26.02 பில்லியன் டாலராக இருந்தது. இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதி 5.27% வளர்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஏப்ரல்-செப்டம்டர் வரையிலான ஏற்றுமதி 125.06 அமெரிக்க டாலர். கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 21.43 % எதிர்மறையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நாட்டின் இறக்குமதி கடந்த செப்டம்பர் மாதத்தில் 30.31 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இறக்குமதி 37.69 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இறக்குமதி இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் 19.60% குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான இறக்குமதி 148.69 பில்லியன் அமெரிக்க டாலர். கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த அளவு 248.08 பில்லியன் டாலர். இது 40.06 % எதிர்மறையான வளர்ச்சி.

2020, செப்டம்பர்-ல் இந்தியாவின் நிகர இறக்குமதியின், வர்த்தக பற்றாக்குறை 2.91 பில்லியன் அமெரிக்க டாலர். இது கடந்தாண்டு செப்டம்பரில் 11.67 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக பற்றாக்குறையுடன் ஒப்பிடும்போது, 75.06% அளவுக்கு கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலியம் அல்லாத மற்றும் ரத்தின கற்கள் இல்லாத நகைகளின் ஏற்றுமதி கடந்த செப்டம்பர் மாதத்தில் 21.11 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த அளவு 19 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 11.12% நேர்மறையான வளர்ச்சியாகும்.

எண்ணெய் அல்லாத மற்றும் தங்கம் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி கடந்த செப்டம்பர் மாதத்தில் 21.80 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 25.14 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 13.29% எதிர்மறையான வளர்ச்சி.

கடந்த செப்டம்பர் மாத ஏற்றுமதியில் நேர்மறையான வளர்ச்சி கண்ட முதல் 5 பொருட்கள், பிற தானியங்கள் (304.71%) இரும்புத் தாது (109.52%), அரிசி (92.44%), எண்ணெய் உணவுகள் (43.90%), கம்பளம் (42.89%)

கடந்த செப்டம்பர் மாத இறக்குதியில் எதிர்மறை வளர்ச்சி கண்ட முதல் 5 பொருட்கள் வெள்ளி(-93,92%), கச்சா பருத்தி மற்றும் கழிவு (-82.02%) செய்திதாள்(-62.44%), தங்கம்(-52.85%), போக்குவரத்து சாதனங்கள் (-47.08%)

மேலும் மருந்து, அரிசி, இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. எலக்ட்ரானிக் பொருட்கள், உலோகம் உட்பட இதர தாதுக்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதி அதிகரித்துள்ளது. ரத்தினக் கற்கள் மற்றும் நகை, நூல், கடற்சார் பொருட்கள் ஏற்றுமதி குறைந்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் எலக்ட்ரிக் பொருட்கள், போக்குவரத்து சாதனங்களின் இறக்குமதி குறைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x