Published : 02 Oct 2020 05:24 PM
Last Updated : 02 Oct 2020 05:24 PM
ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உரங்கள் துறை, தகவல் ஆளுகை தரக் குறியீட்டு பட்டியலில் 16 பொருளாதார அமைச்சங்கங்கள்/துறைகளில் இரண்டாவது இடமும், 65 அமைச்சகங்கள்,துறைகளில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.
அதிகபட்சம் ஐந்து புள்ளிகள் உள்ள தகவல் ஆளுகை தரக் குறியீட்டு அளவுகோலில் 4.11 புள்ளிகளை பெற்று உரங்கள் துறை இந்த சாதனையை செய்துள்ளது.
மத்திய திட்டங்களை செயல்படுத்துவதில் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளின் செயல்பாட்டை அளவிடுவதற்காக நிதி ஆயோக்கின் வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு அலுவலகத்தால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அமைச்சகங்கள்/துறைகளிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதன் மூலம் அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துவது இந்த ஆய்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். ஆய்வின் ஒவ்வொரு கேள்விக்கும் 0 முதல் 5 வரை புள்ளிகள் வழங்கப்பட்டது.
தனது துறையின் சிறப்பான செயல்பாட்டை பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ள மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் டி வி சதானந்த கவுடா, "நிதி ஆயோக்கின் வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு அலுவலகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு மிகவும் வரவேற்கத் தக்கது. இதன் மூலம் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் முன்னேற்றம் அடைந்து இலக்குகளை எட்ட முடியும்," என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT