Published : 27 Sep 2015 11:45 AM
Last Updated : 27 Sep 2015 11:45 AM
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதி காரியாக மத்தியாஸ் முல்லரை இயக்குநர் குழுமம் நியமித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது புகை அளவு மோசடி குற்றச் சாட்டுகள் எழுப்பப்பட்டதால் கடந்த புதன்கிழமை தலைமைச் செயல் அதிகாரி மார்டின் வின்டர்கோர்ன் ராஜினாமா செய்தார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முல்லர் இந்த குழுமத்தின் போர்சே பிரிவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபோக்ஸ்வேகன் குழுமம் இந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண் டுள்ளது. இப்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த நிறுவனம் மீது விசாரணையை தொடங்கியுள்ளன. புதிதாக நிய மிக்கப்பட்டுள்ள 62வயதான முல்லர், பொதுமக்களிடம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருக் கிறார். இப்போது வேகமாக செயல் படுவதை விட கவனமாக செயல் படுவதே முக்கியம். நாங்கள் எங்களது பொறுப்பினை உணர்ந்தி ருக்கிறோம்.
மிகவும் கடுமையான விதிமுறை களை உருவாக்க இருக்கிறோம். முன்பை விட ஃபோக்ஸ்வேகன் பலமான நிறுவனமாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக பதவி விலகிய மார்டின் வின்டர்கோர்ன் 2007-ம் ஆண்டில் இருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார். நிறுவனத்தின் தலைவர் பெர்தோல்டு ஹூபர் (Berthold Huber) கூறும் போது, வாடிக்கையாளர்கள் முதலீட்டாளர் கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் மன்னிப்பு கோருகிறோம். ஃபோக்ஸ்வேகன் மீண்டு வர இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
இது எப்படி நடந்தது என்று கண்டுபிடிக்கும் வரை பல பணியாளர்களுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. டெவலப் பர்கள் மற்றும் தொழில்நுட்ப பணி யாளர்கள் நடந்துகொண்ட விதம் பொதுமக்களுக்கு மட்டுமல் லாமல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கும் அதிர்ச்சியாக உள்ளது என்றார்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நவம்பர் 9-ம் தேதி நடக்க இருக் கிறது. அப்போது நிறுவனத் தின் மாற்றங்களுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT