Published : 17 Sep 2020 09:01 PM
Last Updated : 17 Sep 2020 09:01 PM
காதி மற்றும் கிராமத்தொழில் ஆணையத்தின் டிக்னிடீ என்னும் புதுமையான திட்டத்தை எம்பிக்கள் அருண் சிங், மீனாட்சி லேகி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையிலான சேவை தினத்தைக் கொண்டாடும் விதத்தில், காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் கேவிஐசி , டிக்னிடீ திட்டத்தின் கீழ், சைக்கிள் மூலம் தேநீர்/காபி விற்கும் ஆறு புதுமையான அலகுகளை புதுடெல்லியில் இன்று விநியோகித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த வேலை இல்லாத இளைஞர்கள் ஆறு பேருக்கு இந்த அலகுகளை மாநிலங்களவை உறுப்பினர் அருண் சிங், புதுடெல்லி எம்.பி மீனாட்சி லேகி ஆகியோர் கேவிஐசி தலைவர் வினய் குமார் சக்சேனா முன்னிலையில் வழங்கினர். இந்த அலகுகள், தேநீர் விற்பனையாளர்களுக்கு, தூய்மையான தின்பண்டங்களை விற்பதன் மூலம், கண்ணியமான வாழ்வாதாரத்தை மேற்கொள்ள உதவும்.
சைக்கிள் மேல் அமைந்துள்ள இந்த தேநீர் விற்பனை அலகுகள் ஒவ்வொன்றின் விலை ரூ.18,000 ஆகும். கேஸ் அடுப்பு, கேஸ் உருளை, ஒரு குடை, பாத்திரங்கள், தேநீர், சர்க்கரை, கோப்பைகள், முறையாக தின்பண்டங்களை வைத்திருப்பதற்கான தனித்தனி அடுக்குகள் ஆகியவற்றை இந்த அலகு கொண்டிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT