Published : 16 Sep 2020 06:49 AM
Last Updated : 16 Sep 2020 06:49 AM

சிறு, குறு நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகைகளை விரைந்து செலுத்த வேண்டும்: 500 நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு

புதுடெல்லி

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை விரைவாக செலுத்த வேண்டும் என்று 500 முன்னணி தனியார் நிறுவனங்களுக்கு மத்திய சிறு, குறு, நடுத்தர அமைச்சகம் (எம்எஸ்எம்இ) உத்தரவிட்டுள்ளது.

பெரும்பாலான பெரிய தனியார் நிறுவனங்கள் சிறு, குறு நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள், சேவைகளைப் பெற்று வரு கின்றன. அதற்கான தொகையை உரிய நேரத்தில் செலுத்துவ தில்லை என எம்எஸ்எம்இ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எம்எஸ்எம்இ மேம்பாட்டுச் சட்டம் 2006-ன்படி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பொருட்கள், சேவைகளுக்கான தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். ஏற்கெனவே இந்த நிறுவனங்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக எம்எஸ்எம்இ அமைச்சகம் தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது 500 முன்னணி தனியார் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள், உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

சிறு, குறு நிறுவனங்களிடம் இருந்து பெரு நிறுவனங்கள் பெற்ற பொருட்கள், சேவைகளுக்கான நிலுவைத் தொகையை விரைந்து செலுத்துமாறு அதில் உத்தரவிட்டுள்ளது.

பெரு நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு இடையிலான பரிவர்த்தனை விவகாரங்களை கண்காணிப்பதற் காக ‘எம்எஸ்எம்இ சமாதன்’ என்ற இணையதளத்தை எம்எஸ்எம்இ அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இந்த தளத்தில் இதுவரை உரிய நேரத்தில் பொருட்கள், சேவை களுக்கான தொகையைச் செலுத்தவில்லை என 54,241 புகார்கள் வந்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.15,840 கோடி என எம்எஸ்எம்இ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவற்றில் 3,899 புகார்கள் இணையதளத்தின் மூலம் தீர்க்கப் பட்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.715 கோடியாகும். 9,296 புகார்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், 4,764 புகார்கள் பரஸ்பர தீர்வுக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற நிலுவைத்தொகை விவகாரங்களுக்கு எளிதில் தீர்வு காண ரூ.500 கோடிக்குமேல் ஆண்டு விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் தங்களை TReDS என்ற தளத் தில் பதிவு செய்துகொள்ளுமாறு எம்எஸ்எம்இ அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் செய லாளர் ஏ.கே.ஷர்மா கூறும்போது, ‘‘75 சதவீத நிலுவைத் தொகை விவகாரங்களுக்கு எம்எஸ்எம்இ சமாதன் இணைய தளம் மூலமே தீர்வு காணப்படுகிறது’’ என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x