Published : 12 Sep 2020 06:32 PM
Last Updated : 12 Sep 2020 06:32 PM
ஐராட் செயலியின் அறிமுகம் மற்றும் பயிற்சித் திட்டத்தை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முன்னெடுத்து செல்கிறது.
ஐராட் (ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவு திட்டம்) செயலியின் இரண்டு நாள் அறிமுகம் மற்றும் பயிற்சி நிகழ்ச்சியை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நடத்தியது.
கர்நாடகாவில் உள்ள குறிப்பிட்ட மாவட்டங்களில் 2020 செப்டம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் இந்த நிகழ்ச்சி நடந்த நிலையில், உத்திரப் பிரதேசத்தில் உள்ள சில மாவட்டங்களில் செப்டம்பர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இவற்றில் கிடைக்கப்பட்ட பின்னூட்டம் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களுக்கு தகுந்த வகையில் ஐராட் செயலி வடிவமைக்கப்படும்.
அடிப்படை ஐராட் செயலி ஏற்கெனவே வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்புடைய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு அது மாற்றி அமைக்கப்படும் அல்லது ஒருங்கிணைக்கப்படும்.
ஆண்ட்ராய்டு தளத்தில் தற்போது கிடைக்கும் இந்த செயலி, விரைவில் ஐஓஎஸ் போன்ற தளங்களில் கிடைக்க செய்யப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT