Published : 12 Sep 2020 04:32 PM
Last Updated : 12 Sep 2020 04:32 PM
கிருஷ்ணா – கோதாவரி (கேஜி) படுகையில் உள்ள மீத்தேன் ஹைட்ரேட்டுகளின் மிகக்குறைந்த மதிப்பீடு, உலகளவில் கிடைக்கும் அனைத்து புதைபடிவ எரிபொருள் இருப்புக்களை விட இரு மடங்காகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் புதைபடிவ எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தூய எரிசக்திக்கான மாற்று ஆதாரங்களைத் தேடுகையில் , கிருஷ்ணா-கோதாவரி (கேஜி) படுகையில் இருந்து நற்செய்தி கிடைத்துள்ளது.
இந்த படுகையில் உள்ள மீத்தேன் ஹைட்ரேட் படிவங்கள் ஒரு வளமான ஆதாரமாகும், மீத்தேன் இயற்கை வாயுவை போதுமான அளவில் விநியோகம் செய்வதை இது உறுதி செய்யும்.
மீத்தேன் ஒரு சுத்தமான மற்றும் சிக்கனமான எரிபொருள். ஒரு கன மீட்டர் மீத்தேன் ஹைட்ரேட்டில் 160-180 கன மீட்டர் மீத்தேன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணா – கோதாவரி (கேஜி) படுகையில் உள்ள மீத்தேன் ஹைட்ரேட்டுகளின் மிகக்குறைந்த மதிப்பீடு, உலகளவில் கிடைக்கும் அனைத்து புதைபடிவ எரிபொருள் இருப்புக்களை விட இரு மடங்காகும்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தன்னாட்சி நிறுவனமான அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஏஆர்ஐ) ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் நடத்திய ஆய்வில், மீத்தேன் ஹைட்ரேட் படிவங்கள் கிருஷ்ணா-கோதாவரி (கேஜி) படுகையில் அமைந்துள்ளது என்றும் இவை உயிரி பாரம்பரியத்தின் தொடக்கத்தை சார்ந்தது என்றும் கண்டுப்பிடித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT