Published : 04 Sep 2020 08:32 AM
Last Updated : 04 Sep 2020 08:32 AM
கரோனா வைரஸின் கோரத்தாண்டவப் பிடியிலிருந்து அமெரிக்கா மீள முயற்சித்து வந்தாலும் அதன் பொருளாதாரம் மீள ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் அங்கு 242 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதிப்பற்றாக்குறை ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க அங்கு 484 லட்சம் கோடி அங்கு செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் வரலாறு காணாத நிதிப்பற்றாக்குறையாக ரூ.242 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று கணிப்புகள் கூறுகின்றன. இது அடுத்த ஆண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிர்ஸ் சபைக்கான பட்ஜெட் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பினால் நாட்டின் கடன் அளவு அதிகரிக்கும். 2ம் உலகப்போருக்குப் பின் நாட்டில் கடன் அளவு அதிகரித்துள்ளது. 2021-ல் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை விட கடன் அளவு அதிகமாக இருக்கும்.
இப்படியே போனால் அடுத்த 10 ஆண்டுகளில் 954 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படும். இந்த நிதிப்பற்றாக்குறை கடந்த ஆண்டின் பற்றாக்குறையை விட 3 மடங்கு அதிகமாகும்.
2008-09 பொருளாதார சரிவு காலத்தை விட தற்போது நிதிப்பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பெறப்பட்ட தனிநபர் வருமான வரி கடந்த ஆண்டை விட 11% குறைவாக உள்ளது.
அதே போல் கார்ப்பரேட் வரி 34% சரிந்துள்ளது, என்று கூறப்பட்டுள்ளது, அடுத்ததாக ஆட்சிக்கு யார் வந்தாலும் இது ஒரு பெரிய சவால்தான் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT