Published : 28 Aug 2020 02:55 PM
Last Updated : 28 Aug 2020 02:55 PM
இந்திய தொழில் வர்த்தக மையம் நடத்திய கரோனாவிற்கு பின் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை இணைச் செயலாளர் சுஜித் குமார் பாஜ்பாய் பேசுகையில் ‘‘கரோனா பேரிடர் மிகப்பெரிய சாவல்களை நமக்கு அளித்துள்ளது. பொருளாதாரத்தை தொடங்குவதற்கும், புதிய திட்டங்களை உருவாக்கி பொருளாதாரத்தை, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழலில் கவனம் செலுத்துவதற்கும் ஒரு வாய்ப்பு அளித்துள்ளது.
நமது அன்றாட வாழ்வில், நம்மைச் சுற்றி உள்ள இயற்கை மற்றும் மற்ற உயிரினங்களும் வாழ்ந்து வருவதை நாம் உணர வேண்டும். கரோனாவால் ஏற்பட்ட பொதுமுடக்கத்தால் கார்பன் உமிழ்வானது இந்த ஆண்டு 8 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.’’ என கூறியதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ‘‘2020ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் கார்பன் வெளியீடு குறைந்திருப்பதாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அலுவலர் தெரிவித்ததாக தகவல்கள், சில ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்த அறிக்கை, உலக அளவில் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியீடு குறையும் வாய்ப்புள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. நம்நாட்டின் வெளியீடு தொடர்பானது அல்ல என்றும், சர்வதேச எரிசக்தி முகமையின் உலக எரிசக்தி மறுஆய்வு 2020 அறிக்கையின்படி இது வெளியிடப்பட்டுள்ளது.’’ என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT