Published : 27 Aug 2020 12:49 PM
Last Updated : 27 Aug 2020 12:49 PM
வங்கிகள் கடன்கள் விஷயத்தில் மிகவும் அதீதமாக எச்சரிக்கையுடன் செயல்பட்டு ரிஸ்க்குகள் எடுக்க விரும்பாமல் கடன் அளிப்பதில் தயக்கம் காட்டினால் அது வங்கிகளின் சுய-தோல்வியில் தான் முடியும் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் எச்சரித்துள்ளார்.
கடன் அளிக்கும் வங்கிகள் தன் அடிப்படையிலிருந்து விலகினால் அது அவர்களின் வாழ்வாதாரத்துக்கே சிக்கலாகி விடும் என்று அவர் கூறியுள்ளார்.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் நடத்திய வெபினார், அதாவது ஆன்லைன் கருத்தரங்கில் வங்கிகள் கடன்களை அளிப்பதில் தயக்கத்துடன் செயல்படுவதைக் காட்டிலும் தங்களது ரிஸ்க் மேலாண்ட்மை மற்றும் நிர்வாக சட்டகங்களை இன்னும் கொஞ்சம் மேம்படுத்துவதில்தான் காவனம் செலுத்த வேண்டும்.
மிகவும் தீவிரமாக ரிஸ்க் குறித்து அச்சப்பட்டால் அது சுய தோல்வியில்தான் முடியும், வங்கிகள் தங்கள் இருப்பை வெல்ல முடியாது. பொருளாதாரத்தை நகர்த்தும் இன்ஜின் கடன் அளித்தலாகும், அது தற்பொது மிகவும் மந்தமாகி விட்டது.
கடன் அளிப்பதில் கடந்த கால அனுபவங்கள், வாராக்கடன் பிரச்சினைகள் வங்கிகளை கடன் அளிப்பதிலிருந்து தடுக்கின்றன. கடன் மோசடிகளை தவிர்ப்பதில் வங்கிகள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. வங்கிகள் தங்கள் ரிஸ்க் சட்டகங்களை மோசடிகளை கண்டுணரும் விதமாக இருக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக வங்கிகள் தொடர்ந்து ஆரோக்கியமாகவும் நிலைத்தன்மை உடையதாகவும் உள்ளது, வரும் காலங்களில் வளர்ச்சி குறித்த புதிய மாதிரியை வங்கிகள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
கரோனா தொடர்பான தங்களது விதிமுறைகளை திட்டமிட்ட முறையில் தான் விலக்கிக் கொள்ளும், உடனடியாகச் செய்வது கடினம் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT