Published : 21 Aug 2020 03:13 PM
Last Updated : 21 Aug 2020 03:13 PM

கரோனா நிவாரணத் தொகை; இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் பயன் பெறும் தொழிலாளர்களுக்கு விதிமுறை தளர்வு

புதுடெல்லி

இஎஸ்ஐசி-யின் அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டப் பயனாளிகளுக்கான தகுதி நிலைகளில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் பயன் பெறும் தொழிலாளர்கள், வேலையில்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் நிவாரணத் தொகை அளிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தை, 2021 ஜூன் 30-ம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதென இஎஸ்ஐ நிறுவனம் தீர்மானித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் தமது வேலைகளை இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை அளிப்பதற்காக, இத்திட்டத்தின் கீழ் உள்ள தற்போதைய நிபந்தனைகளை தளர்த்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தளர்த்தப்பட்ட நிபந்தனைகளின்படி, அதிகரிக்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை 24.03.2020-லிருந்து 31.12.2020 வரையிலான காலத்திற்கு வழங்கப்படும். அதற்கு பிறகு, அதாவது 01.01.2021 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு தளர்த்தப்படாத முந்தைய நிபந்தனைகளுடன் இந்தத் திட்டம் தொடரப்படும். 31.12.2020-க்கு பிறகு தளர்த்தப்பட்ட நிபந்தனைகள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு சந்தோஷ் குமார் கங்குவார் தலைமையில், நேற்று நடைபெற்ற இஎஸ்ஐ நிறுவனத்தின் 182-வது கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு மேற்கொள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x