Published : 13 Aug 2020 08:41 PM
Last Updated : 13 Aug 2020 08:41 PM

இயற்கை விவசாயிகள் எண்ணிக்கை: இந்தியா முதலிடம் 

கோப்புப் படம்

இயற்கை விவசாயிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தையும், இயற்கை விவசாயப்பரப்பில் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளது.

உலகத்திலேயே முற்றிலும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் முதல் மாநிலமாக சிக்கிம் திகழ்கிறது. திரிபுரா, உத்தரகண்ட் மாநிலங்களும் இதேபோன்ற இலக்குகளை அடைந்துள்ளன. இந்தியாவின் வடகிழக்கு பகுதி பாரம்பரியமாக இயற்கை விவசாயத்தை கொண்டதாகும்.

அங்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், நாட்டின் மற்ற பகுதிப் பயன்பாட்டை விட மிகவும் குறைவாகும். இதேபோல, மலைவாழ் பழங்குடியினர் பகுதிகள் மற்றும் தீவுகளில் இயற்கை விவசாயம் செழித்துள்ளது.

விவசாயிகள், ரசாயனப் பயன்பாடு இல்லாத, இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு, தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், வடகிழக்குப் பிராந்தியத்துக்கான இயற்கை மதிப்புச் சங்கிலி மேம்பாட்டு இயக்கம், பாராம்பரகட் கிருசி விகாஸ் யோஜனா ஆகிய இரண்டு திட்டங்கள் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.

2018-ஆம் ஆண்டு விவசாய – ஏற்றுமதிக் கொள்கை அளித்த அழுத்தம் காரணமாக , இந்தியா, உலக இயற்கை விவசாய சந்தைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்தது. ஆளி விதைகள், எள், சோயாபீன்ஸ், தேயிலை, மருத்துவ மூலிகைகள், அரிசி, பருப்பு வகைகள் ஆகியவை இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதியாகும் இயற்கை விவசாய

உற்பத்திப் பொருள்களாகும். 2018-19-ஆம் ஆண்டில் ஏற்றுமதியில் இப்பொருள்கள் 50 சதவீத்தை எட்டியதுடன், ரூ.5151 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அசாம், மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இவை ஏற்றுமதியாகின்றன. சுகாதார உணவின் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து, ஏற்றுமதி அளவும் அதிகரித்ததுடன், புதிய இடங்களுக்கும் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இயற்கை விவசாய உற்பத்தியில், நுகர்வோர் நம்பிக்கையைப் பெறுவதற்கு சான்றளிப்பு என்பது முக்கிய அம்சமாகும். அரசின் மேற்கூறிய இரண்டு திட்டங்களிலும், பங்கேற்பு உத்தரவாத முறை, தேசிய இயற்கை விவசாய உற்பத்தித் திட்டம் ஆகியவை முறையே உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகளை இலக்காகக் கொண்டு சான்றளிப்பு வழங்கப்படுகின்றன. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர (இயற்கை விவசாய உணவு) ஒழுங்குமுறை - 2017, என்பிஓபி /பிஜிஎஸ் தரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிகாரப்பூர்வ இயற்கை விவசாய உற்பத்திப் பொருள்களை இனம் காண நுகர்வோர், எப்எஸ்எஸ்ஏஐ, ஜெய்விக் பாரத், பிஜிஎஸ் முத்திரைகளைப் பார்த்து வாங்கவேண்டும். பிஜிஎஸ் பச்சை என்பது ரசாயனம் அற்ற உற்பத்தி பொருள் என்பதைக் குறிக்கும்.

பாராம்பரகட் கிருசி விகாஸ் யோஜனாவின் கீழ், சுமார் 7 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், சுமார் 40000 தொகுப்புகள் இயங்கி வருகின்றன. வடகிழக்கு பிராந்தியத்துக்கான இயற்கை மதிப்பு சங்கிலி மேம்பாட்டு இயக்கம் தனது வரம்புக்குள் 160 எப்பிஓ-கள் சுமார் 80,000 ஹெக்டேரில் சாகுபடி மேற்கொண்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x