Published : 13 Aug 2020 08:13 PM
Last Updated : 13 Aug 2020 08:13 PM

ரயில்வே ஊழியர்கள் ஆன்லைன் மூலம் பாஸ் எடுக்க வசதி அறிமுகம்

புதுடெல்லி

ரயில்வே ஊழியர்கள் ஆன்லைன் மூலம் பாஸ் எடுக்கவும் பயணச் சீட்டு பதிவுச் செய்யவும் ஹெச்.ஆர்.எம்.எஸ்-இன் கீழ் கிரிஸ் உருவாக்கியுள்ள இ-பாஸ் தொகுப்பை ரயில்வே வாரியத் தலைவர் வெளியிட்டார்.

கிரிஸ் உருவாக்கியுள்ள மனிதவள நிர்வாக அமைப்பின் (HRMS) மின்னணுத் தொகுப்பை ரயில்வே வாரியத் தலைவர் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வேயின் நிதிஆணையர், வாரியத்தின் அனைத்து உறுப்பினர்கள், ஐ.ஆர்.சி.டி.சியின் தலைமை நிர்வாக இயக்குநர் கிரிஸ் அமைப்பின் பொது மேலாளர், அனைத்து பொதுமேலாளர்கள், பி.சி.பி.ஓ.எஸ், பி.சி.சி.எம்.எஸ், பி.எஃப்.ஏ-க்கள் மற்றும் ரயில்வே கோட்ட மேலாளர்கள் (CMD/IRCTC, MD/CRIS, all GMs, PCPOS, PCCMS, PFAs and DRMs) கலந்து கொண்டனர்.

தலைமை இயக்குநர் (மனிதவளம்), இ-பாஸ் தொகுப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து எடுத்துரைத்ததோடு படிப்படியாக அதனைச் செயல்படுத்தும் நடைமுறை குறித்தும் விளக்கினார்.

இந்திய ரயில்வேயில் பாஸ் வழங்குகின்ற செயல்முறையானது பெரும்பாலும் ஊழியர்களால்தான் மேற்கொள்ளப்படும். ரயில்வே ஊழியர்களுக்கு பாஸ் மீதான பயணச்சீட்டுப் பதிவை இணையத்தின் வழியாக மேற்கொள்ளும் வசதி இல்லை.

ஹெச்.ஆர்.எம்.எஸ் திட்டத்தின் கீழ் கிரிஸ் இந்த மின்னணுத் தொகுப்பை உருவாக்கி உள்ளது. இது படிப்படியாக இந்திய ரயில்வேயில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த வசதி நடைமுறைப்படுத்தப்படும் போது ரயில்வே ஊழியர் பாஸ் பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு அலுவலகத்திற்கு வர வேண்டிய தேவை இல்லை மற்றும் பாஸ் பெறுவதற்காக காத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை.

ஊழியர் பாஸுக்கான விண்ணப்பத்தை எங்கிருந்து வேண்டுமென்றாலும் ஆன்லைன் மூலம் சமர்ப்பித்து ஆன்லைன் மூலமாகவே பாஸை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த பாஸுக்காக விண்ணப்பிப்பது மற்றும் பாஸை உருவாக்குகின்ற செயல்முறைகளை கைபேசியிலிருந்து மேற்கொள்ளலாம். பாஸ் மீது பயணச் சீட்டுப் பதிவு செய்வதை தற்போது பி.ஆர்.எஸ் / யு.டி.எஸ் கவுண்டரில் (PRS/UTS counter) பதிவு செய்யும் வசதியோடு கூடுதலாக ஐ.ஆர்.சி.டி.சி-யின் வலைத்தளத்திலும் இணையம் வழியாக மேற்கொள்ளலாம். இந்த வசதியின் மூலம் ரயில்வே ஊழியர்கள் சிரமமில்லாமல் தங்களது பாஸை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேபோன்று பாஸ் வழங்குவதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து அலுவலகர்களும் சிரமமில்லாமல் ஒரே நேரத்தில் பணி செய்வதற்கும் இது உதவும்.

ஹெச்.ஆர்.எம்.எஸ் செயல்திட்டம் என்பது இந்திய ரயில்வேயில் ஹெச்.ஆர் நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் ஒரு விரிவான திட்டமாகும். ஹெச்.ஆர்.எம்.எஸ்சில் மொத்தமாக 21 தொகுப்புகள் திட்டமிடப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஹெச்.ஆர்.எம்.எஸ்-சின் எம்ப்ளாயி மாஸ்டர் மற்றும் இ-சர்வீஸ் ஆவணத் தொகுப்புகளில் 97 சதவிகித ரயில்வே ஊழியர்களின் அடிப்படை தகவல் தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x