Published : 02 Aug 2020 08:03 AM
Last Updated : 02 Aug 2020 08:03 AM
பயிர்க்காப்பீடு செய்வதற்கான அவகாசம் முடிந்துள்ள நிலையில் இதில் பெரிய அளவில் விவசாயிகள் ஆர்வம் காட்டாததால் காப்பீட்டு நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
நெல், மக்காச்சோளம், துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சைப்பருப்பு, நிலக்கடலை, சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களுக்கு ஜூலை 31க்குள் காப்பீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.
ஆனால் பயிர்க்காப்பீடு செய்ய விவசாயிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால் காப்பீட்டு நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டங்கள் பற்றி ஏற்கெனவே விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளரும் விவசாயிகள் நலம் விரும்பியுமான பி.சாய்நாத் 2018-ல் ஒரு கட்டுரையில் குறிப்பிடும்போது மகாராஷ்ட்ராவில் ஒரு மாவட்டத்தின் பயிர்க்காப்பீடு நிலவரத்தை எடுத்துக் காட்டினார். அதாவது 2.80 லட்சம் விவசாயிகள் சோயா விதைத்தனர். இதற்காக விவசாயிகள் 19.2 கோடி பிரீமியம் செலுத்தியிருந்தனர். மாநில அரசு, மத்திய அரசு தலா ரூ.77 கோடி தங்கள் பங்களிப்பாக பயிர்க்காப்பீடு செலுத்தினர். மொத்தம் ரூ.173 கோடி. இது தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு வந்த தொகை.
இதில் பயிர்நாசம் , தோல்வி உள்ளிட்டவற்றுக்கு கொடுக்கப்பட்ட கிளைம் தொகை ரூ.30 கோடிதான், என்கிறார் சாய்நாத்.
மேலும் அவர் அந்தக் கட்டுரையில் கடந்த 20 ஆண்டுகளாகவே ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 2000 விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். 80% விவசாயிகள் கடனில் தத்தளிக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் மீதும் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை என்ற செய்தி காப்பீட்டு நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT