Published : 28 Jul 2020 08:35 PM
Last Updated : 28 Jul 2020 08:35 PM
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
வருங்காலத்திற்கான இலக்கு மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் (NBFC) பங்குதாரர்கள் பங்கேற்கும், நாளை நடைபெறவுள்ள அமர்வில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ள உள்ளார்.
கடன் பொருள்கள் மற்றும் விநியோக செயல்திறன் மிக்க மாதிரிகள், தொழில் நுட்பத்தின் மூலமான பொருளாதார வளர்ச்சி, நிதித் துறையின் நிலைத்தன்மைக்கான விவேகமான நடைமுறைகள் போன்றவை குறித்து நாளை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
உள்கட்டமைப்பு, வேளாண்மை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட உள்ளூர் உற்பத்திக்கு நிதியளிப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பதில் வங்கித் துறை முக்கியமான பங்கினை வகிக்கிறது. தொழில்நுட்பத்தின் மூலமான பொருளாதார வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை உருவாக்க பெரும் பங்களிக்கும்.
மத்திய அரசின் மூத்த அலுவலர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்பர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT