Published : 22 May 2014 11:00 AM
Last Updated : 22 May 2014 11:00 AM
#யாகூ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.
#யாகூ இந்தியா நிறுவனத்துக்கு வருவதற்கு முன்பு நெட்வொர்க் 18 மீடியா நிறுவனத்தின் ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகையின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார்.
#20 வருட கார்ப்பரேட் வாழ்க்கையில் சோனி மியூசிக், ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே குழுமம், ராஜ் குழுமம், மாரிகோ உள்ளிட்ட பல நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறார்.
#ஹைதராபாதில் இருக்கும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் புரெக்டஷன் இன்ஜினீயரிங்கில் தங்கப்பதக்கம் வாங்கிய இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தவர்.
#வாடிக்கையாளர்கள் பற்றியும், விளம்பரதார்களை பற்றியும் குர்மித்துக்கு இருக்கும் புரிதல் யாகூ நிறுவனத்தின் சொத்து. குர்மித் போன்ற தலைவர் கிடைத்ததில் மகிழ்ச்சி என்று இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா செயல்பாடுகளுக்கான துணைத்தலைவர் ஒவோன் சாங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT