Published : 22 Jul 2020 04:21 PM
Last Updated : 22 Jul 2020 04:21 PM

சட்ட விரோதமாக சிகரெட் கடத்தல்; ரூ.72 கோடிக்கும் அதிகமான வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

சட்ட விரோதமாக சிகரெட் கடத்தல் மூலம் ரூ.72 கோடிக்கும் அதிகமான வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோட்டாவில் உள்ள தொழிற்சாலை மூலம் சிகரெட் கடத்தல் செய்து, வரி ஏய்ப்பும் செய்யப்பட்டிருப்பதை சரக்குகள் மற்றும் சேவை வரி புலனாய்வுக்கான தலைமை இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது.

இது தொடர்பாக 2020 ஜூலை 17-ந் தேதி அன்று கோட்டா மற்றும் நகரில்(Nagaur) உள்ள தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கிடங்குகள், ரகசிய அலுவலகங்கள், பயனாளிகளின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனைகளின் போது வரிகள் மற்றும் தீர்வைகள் செலுத்தாமல் சிகரெட் விநியோகித்திருப்பது தொடர்பான ஆவணங்களும், மின்னணு சாதனங்களும் கிடைத்தன. ஆரம்பகட்ட விசாரணையில், ரூ.72 கோடிக்கும் அதிகமான அளவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

முடக்க காலத்தின் போதும், சிகரெட் விநியோகம் நடந்திருப்பது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் தரவுகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஜூலை 20-ம் தேதி அன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x