Published : 18 Jul 2020 02:19 PM
Last Updated : 18 Jul 2020 02:19 PM
நடப்பு ஆண்டில் இந்தியாவில் அமெரிக்காவின் நேரடி முதலீடு இதுவரை 40பில். டாலர்களைக் கடந்துள்ளதாக வர்த்தக ஆய்வுக்குழு ஒன்று தெரிவித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியச் சந்தைகள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இது காட்டுவதாக அமெரிக்க-இந்திய பொருளாதாரக் கூட்டுறவு அமைப்பின் தலைவர் முகேஷ் ஆகி என்பவர் தெரிவித்துள்ளார்.
சமீப வாரங்களில் மட்டும் இந்தியாவில் அமெரிக்க முதலீடு 20 பில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என்று இந்த அமைப்பு தெரிவிக்கின்றது. கூகுள், வால்மார்ட், ஃபேஸ்புக் மேற்கொண்ட அறிவிப்புகளை சுட்டிக்காட்டி இந்த விவரத்தை அளித்துள்ளது.
முகேஷ் ஆகி மேலும் கூறும்போது, “இந்தியா மீதான முதலீட்டார்களின் நம்பிக்கை உயர்ந்துள்ளது. உலக முதலீட்டாளர்களுக்கு இந்தக் காலக்கட்டத்திலும் இந்தியாதான் நம்பிக்கைக்குரிய முதலீட்டிடமாக உள்ளது.
அமெரிக்காவிலிருந்து மட்டுமல்ல மத்திய கிழக்கு, தூரக் கிழக்கு நாடுகளிலிருந்தும் முதலீடுகள் வந்துள்ளன.
இந்த அமைப்புதான் அமெரிக்காவிலிருந்து இந்தியாவை நோக்கி முதலீடுகளைத் திருப்ப பணியாற்றி வருகிறது. சீனாவிலிருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும் இந்த அமைப்புத்தான் ஊக்குவிக்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் கடந்த 3 ஆண்டுகளில் முதலீடு இந்தியா பக்கம் அதிகம் திருப்பி விடப்படுகிறது, குறிப்பாக கரோனா காலத்தில் அதிகமாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம் உயர்ந்ததாக உள்ளது, செயல்படுத்துவதில் சவால்கள் உள்ளன. நான் இதற்கு முன்னால் பார்த்ததை விட உற்பத்தி துறையில் ஊக்குவிப்புக்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொள்கை சட்டகம் சரியான திசையில் செல்கிறது”, என்கிறார் முகேஷ் ஆகி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT