Published : 16 Jul 2020 09:04 PM
Last Updated : 16 Jul 2020 09:04 PM

வாகனப்பதிவுத் தகடுகளில் ஆல்பா வண்ண எண்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

வாகனப்பதிவுத் தகடுகளில் ஆல்பா வண்ண எண்களைத் தெளிவாகப் பயன்படுத்த வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான பதிவு எண்கள் தெளிவாகத் தெரியும்படி அமைக்குமாறு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

2020 ஜூலை 14-ஆம் தேதி எஸ்ஓ 2339 (இ) என்ற எண்ணில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில், பதிவு எண் தகடுகளில் உள்ள குறைபாடுகளைக் களையும் வகையில், ஒவ்வொரு பிரிவு வாகனங்களுக்கும் , வெவ்வேறு ஆல்பா எண்களின் வண்ணத்தை தெளிவாகத் தெரியுமாறு அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தெளிவாகத் தெரிவதற்காகவே இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுவதாகவும், பதிவு எண் பலகைகள் விஷயத்தில் புதிய வரையறை ஏதுமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு என வேறுபட்ட வாகனப்பதிவு எண் அடையாளங்களை , 1988 ( 59/1988) மோட்டார் வாகனச் சட்டம் 41-வது பிரிவு துணைப்பிரிவு 6 –இன் படி , அமைச்சகம் 1989 ஜூன் 12-ஆம்தேதி, எஸ்ஓ 444 (இ) என்ற எண்ணில் வெளியிட்ட அறிவிக்கையில், கூறியிருந்தது. பின்னர் வாகனங்களின் வகைக்கு ஏற்ப பதிவு எண் பலகைகளில் ஆல்பா எண்களை வண்ணத்தில் குறிப்பிடுமாறு உத்தரவிட்டு, 1989 அறிவிக்கையில் திருத்தம் செய்து, 1992 நவம்பர் 11-ஆம்தேதி எஸ்ஓ 827 (இ) என்ற எண்ணில் அறிவிக்கை வெளியிட்டது. மேலும், அமைச்சகம் ஜிஎஸ்ஆர் 901 (இ) என்ற எண்ணில் 13.12.2001 தேதியிட்ட அறிவிக்கையில் ,

போக்குவரத்து, போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு பதிவு எண் பலகை வண்ணங்களை வரையறுத்தது.

இந்தப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில், 1989 ஜூன் 12-ஆம்தேதி, எஸ்ஓ 444 (இ) என்ற எண்ணில் வெளியிட்ட அறிவிக்கையின் முக்கிய அம்சம் விடுபட்டிருந்தது அமைச்சகத்திடம் சுட்டிக்காட்டப்பட்டது. இதில் தெளிவற்ற தன்மை இருப்பது தெரியவந்ததையடுத்து, தெளிவு படுத்துவதற்காக இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x