Published : 14 Jul 2020 03:51 PM
Last Updated : 14 Jul 2020 03:51 PM
வெட்டுக்கிளிகளால் ராஜஸ்தானில் சில மாவட்டங்களில் சிறிய அளவில் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது, மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் பயிர்ச்சேதம் ஏற்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
வெட்டுக்கிளியை கட்டுப்படுத்தும் அலுவலகங்கள் வாயிலாக, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் 1,60,658 எக்டர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், இந்த ஆண்டு ஏப்ரல் 11-ந் தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட மாநிலங்களுடன் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பிஹார் ஆகிய மாநிலங்களில், 1,36,781 எக்டர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் 2020 ஜூலை 12 வரை மேற்கொண்டன.
தற்போது 60 குழுக்களும், 200-க்கும் மேற்பட்ட மத்திய அரசு பணியாளர்களும் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக தெளிப்பான்கள் மூலம் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. கூடுதலாக, தெளிப்பான்கள் பொருத்தப்பட்ட 55 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. 15 ட்ரோன் கருவிகளைப் பயன்படுத்தி, 5 நிறுவனங்கள் வெட்டுக்கிளிகளை அழிப்பதற்காக, பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ராஜஸ்தானில் பாலைவனப்பகுதியில், தேவைக்கேற்ப பெல் ஹெலிகாப்டர் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. எம்ஐ-17 ரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி வெட்டுக்கிளியை கட்டுப்படுத்தும் முயற்சிகளை இந்த விமானப்படை சோதனை அடிப்படையில் மேற்கொண்டுள்ளது.
குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பிஹார், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளிகளினால் பெரிய அளவில் பயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ஆனால் ராஜஸ்தானில் சில மாவட்டங்களில் சிறிய அளவில் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான், ம.பி., பஞ்சாப், குஜராத், உ.பி., மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹரியானா, பிகார் ஆகிய மாநிலங்களில் சுமார் 3 லட்சம் எக்டர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த நடவடிக்கைகள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT