Published : 12 Jul 2020 03:26 PM
Last Updated : 12 Jul 2020 03:26 PM
தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்தியாவில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத அளவுக்கான - அதாவது ரூ.20 லட்சம் கோடி அளவிலான சிறப்புப் பொருளாதார மற்றும் விரிவான தொகுப்புத் திட்டத்தை 2020 மே 12ஆம் தேதி மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சிய நோக்கிலான அழைப்பை அவர் விடுத்தார். தற்சார்பு இந்தியாவுக்கு - பொருளாதாரம், கட்டமைப்பு, செயல்பாட்டு முறை, துடிப்பான மக்கள், தேவை என்ற ஐந்து அம்சங்கள் தான் தூண்களாக இருக்கும் என்று அவர் கூறினார்.
பிரதமரின் அழைப்பைத் தொடர்ந்து, 2020 மே 13 முதல் 17 ஆம் தேதி வரையில் தொடர்ச்சியான செய்தியாளர் சந்திப்புகள் மூலம், தற்சார்பு இந்தியாவுக்கான திட்டங்களின் விவரங்களை நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகங்கள், தங்கள் இலாக்கா தொடர்பான அறிவிப்புகளை உடனடியாக அமல் செய்யத் தொடங்கின. பொருளாதாரத் தொகுப்புத் திட்டங்களின் அமலாக்கம் குறித்து தொடர்ச்சியாக நிதி அமைச்சர் நேரடியாகக் கண்காணித்து வருகிறார்.
தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தின் அமலாக்கத்தில் நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT