Published : 27 Sep 2015 11:42 AM
Last Updated : 27 Sep 2015 11:42 AM

காலத்துக்கு ஏற்றார்போல மாற்றி சிந்திக்க வேண்டும்: தொழில் முனைவோருக்கு ஹெச். வசந்தகுமார் ஆலோசனை

தொழில்முனைவோராக வெற்றி பெற காலத்துக்கு ஏற்றார்போல மாற்றி சிந்திக்க வேண்டும் என வசந்த் அண்ட் கோ நிறுவனர் ஹெச். வசந்தகுமார் தெரிவித்தார்.

‘தி இந்து’ வணிகவீதி மற்றும் சிவகாசி காளீஸ்வரி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜி சார்பில், தொழில் முனைவோரை உருவாக்கும் சிறப்பு பயிலரங்கம், மதுரை விரக னூர் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கில் தொழில் முனைவோராக வெற்றி பெற்ற வர்கள் மாணவர்களுக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கிப் பேசினர்.

வசந்த் அண்ட் கோ குரூப் நிறுவனர் ஹெச். வசந்த் குமார் பேசியதாவது: மாணவர்கள் தொழில் முனைவோராக வெற்றி பெற காலத்துக்கு ஏற்றார்போல மாற்றி யோசிக்க வேண்டும். தொழிலில் வெற்றிபெற்றாலும், அதை தக்கவைக்க தொடர்ந்து போராட வேண்டும். நாம் செல்லு மிடம் எல்லாம் பாறைகள் இருக் கின்றன. ஆனால், அந்தப் பாறைகளை கடவுள் சிலைகளாக வடிக்கும் சக்தி கலைஞனிடம் உள்ளது. இதுபோன்ற சிந்தனைத் திறன், ஒவ்வொரு துறையில் உள்ளவர்களிடமும் உள்ளது. வாழ்க்கைப் பயணத்தில், ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும்.

உண்மை, நேர்மை, சாதிக்கும் ஆர்வம் இருந்தால் எந்த துறை யிலும் வெற்றி பெறலாம். வெற் றியை, யாரும் தேடி வந்து தர மாட் டார்கள். நாமேதான் வெற்றியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறைவன் எல்லோருக்கும், எல்லா சக்தியையும் கொடுத்துள் ளார். அந்த சக்தியை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றி உள்ளது. கல்வியை பாதையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லோரிடமும் ஆலோசனைக் கேட்கக் கூடாது. மனம் என்ன சொல்கிறதோ, அதன்படி நடக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நமது திறமையை கூர்படுத்திக் கொள்ள வேண்டும். சாதிப்பதற்கு பணம் தேவையில்லை. மனம் இருந்தால் போதும் என்றார்.

முன்னதாக, முத்தூர் ஸ்ரீ செண் பகா புட் புராடக்ஸ் நடத்தி சாதித்த, போலியோவால் பாதிக் கப்பட்ட எஸ். செண்பகம் பேசுகை யில், சாதாரண குடும்பத்தில் பிறந்து ப்ளஸ் 2 முடித்தேன். இளம் வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. எங்கள் குடும்பத் தினர் அரிசி ஆலை நடத்தினர். இடையில் ஏற்பட்ட மின்சாரப் பிரச்சினையால் அரிசி ஆலையை மூடும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த ஆலையை மூடாமல் அதை பயன்படுத்தி மாற்றுத்தொழிலைத் தொடங்க திட்டமிட்டேன்.

தற்போது பாஸ்ட் புட் கலாச் சாரத்தால் இயற்கை தானிய உணவு களை மக்கள் மறந்துவிட்டனர். தற்போது ஓரளவு சிறுதானிய உணவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால், எங்கள் ஆலையில் சிறு தானியங்கள் மூலம் சத்துமாவுகள் தயாரித்து சந்தைப்படுத்தினேன். ஒரு பொருளை தயாரித்து சந்தைப் படுத்தவது மிகவும் சிரமம். எல்லோரும் படித்து முடித்தவுட னேயே வேலையைத்தான் எதிர் பார்க்கிறார்கள். சிறியதாக இருந் தாலும் சொந்தமாக தொழிலைத் தொடங்கினால், நாமும் தொழில் முனைவோராகலாம். பிறருக்கும் வேலை வாய்ப்பை வழங்கலாம் என்றார்.

எதையும் சவாலாக ஏற்க வேண்டும்

இளம் தொழில்முனைவோராக சாதித்த ஓவன் பைகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செய்யும் பைவ் பிங்கர்ஸ் நிறுவனத்தின் அருண் பேசுகையில், கல்லூரியில் படிக்கும் போதே சொந்தமாகத்தான் தொழில் தொடங்க வேண்டும் எனத் திட்டமிட்டேன். நினைத்தபடி நண்பர் களுடன் சேர்ந்து தொழிலைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் பெரிய அளவில் நஷ்டமடைந்தேன். வங்கிக் கடனைக் கூட அடைக்க முடியாமல் சிரமப்பட்டோம். ஆனால், சோர்ந்துவிடாமல் அதையே சவாலாக ஏற்று பின்னர் வெற்றி பெற்றோம். வெளி நாடுகளை ஒப்பிடும்போது மனித வளம் மிகுந்த இந்தியா தொழில் தொடங்க உகந்த இடம். தொழில் தொடங்கினால் ஏற்றம், இறக்கம் இருக்கும். இறக்கம் சற்று அதிக மாகவே இருக்கும். புதுமை, தனித்துவத்துடன் தொழிலைத் தொடங்கினால் சாதிக்கலாம் என்றார்.

உங்களை பற்றி உயர்வாக எண்ணுங்கள்

மனிதவள ஆலோசகர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ஒரு நிறுவனத்தை உருவாக்குவது, புதிய சிந்தனையில் சாதிப்பது மிகவும் கஷ்டம். இன்றைய காலக் கட்டத்தில் பிரமாண்டமான வாய்ப்புகள் உள்ளன. அரசு நிறைய உதவிகள் செய்யத் தயாராக உள்ளது. ஒவ்வொருவருடைய உள் ளுணர்வும் என்னவாக வேண்டும் என்பதைச் சொல்கிறது. அதனால், உள்ளுணர்வு சொல்வதை முதலில் கேளுங்கள். எல்லோரிடமும் ஆலோ சனை கேட்காதீர்கள் என்றார்.

நேட்டிவ் லீட் பவுண்டேஷன்-நேட்டிவ் ஏஞ்சல் நெட்வொர்க் சிவராஜா ராமநாதன் பேசுகையில், இளம் தலைமுறையினர் வழிகாட்டு தல் இல்லை, பணம் இல்லை என சொல்லக்கூடாது. சிந்திக்கும், சாதிக்கும் ஆர்வம் இருந்தால் இன்றைய மாணவர்கள் நாளைய தொழில் முனைவோர் ஆகலாம். பேஸ்புக், கூகுள் போன்றவை கூட, இளைஞர்களின் சிந்தனையில் உருவானவைதான்.

நான் சாதிக்கப் பிறந்தவன், மாறுபட்டு சிந்திக்க முடியும் என நம்மைப் பற்றி உயர்வாக நினைத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். இந்த உலகம் 2% தொழில் முனைவோரால்தான் வழி நடத்தப் படுகிறது. அந்த 2 சதவீதம் பேரில், ஒருவராக நீங்கள் இருக்க தொழில் முனைவோராக முயற்சி செய்யுங் கள் என்றார். இந்தக் கருத்தரங் கில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, வேலம்மாள் பொறி யியல் கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x