Published : 22 May 2020 10:56 AM
Last Updated : 22 May 2020 10:56 AM
குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ ரேட் விகிதத்தை 4.4 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்தும், கடனுக்கான தவணை செலுத்தும் காலக்கெடுவை மேலும் 3 மாத காலத்துக்கு நீட்டித்தும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று அறிவித்தார்
கடந்த மார்ச் 27-ம் தேதி ரெப்போ ரெட் விகிதத்தை 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகக் குறைத்து அறிவித்த நிலையில் அடுத்த இரு மாதங்களில் மீண்டும் 40 புள்ளிகளைக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி.
இந்த வட்டிக்குறைப்பின் மூலம் வங்கிகளில் வீட்டுக்கடன் பெற்றவர்கள், வாகனக்கடன் பெற்றவர்கள், தொழிலுக்காக கடன் பெற்றவர்கள் மாதந்தோறும் செலுத்தும் தவணைக்கான வட்டி பெருமளவு குறையும். கடந்த இரு மாதங்களில் ஏறக்குறைய. 1.15 சதவீதம் வட்டியைக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனாவால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் தொழில்முடக்கம், நிறுவனங்கள் மூடல் போன்றவற்றால் வருமானமில்லாமல் மக்கள் இருப்தால் வங்கியில் பெற்ற கடனுக்கான தவணை செலுத்தும் காலத்தை மார்ச் முதல் மே வரை செலுத்த தேவையில்லை என கடந்த மார்ச் 27-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவி்த்தது.
அதேபோல இந்த முறையும் கடனுக்கான தவணையை செலுத்தும் காலத்தை கூடுதலாக 3 மாதங்கள் அதாவது, ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்ததாஸ் அறிவித்தார். இதன் மூலம் கடனுக்கான தவணை செலுத்தும் அவகாசம் 6 மாதங்களாக கடந்த மார்ச் மாதம் முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கான ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் இனிவரும் காலங்களில் மக்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவது அதிகரிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT