Published : 20 May 2020 08:54 PM
Last Updated : 20 May 2020 08:54 PM
நிதிநிலை ஒருங்கிணைப்புக்கான திட்டமிடலுக்காக 15- வது நிதிக் குழுவின் முதலாவது கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
நிதிநிலை ஒருங்கிணைப்புக்கான திட்ட வரைபடம் வகுப்பது பற்றிய 15ஆவது நிதி குழுவின் முதலாவது கூட்டம் நாளை காணொலி மூலமாக நடைபெறும். பதினைந்தாவது நிதி ஆணையத்தின் குறிப்பு விதிமுறைகள், மாநில மத்திய மாநில அரசுகளின் நிதி நிலைமைகளை ஒருங்கிணைப்பதற்கான திட்ட வரைபடத்துக்கான பரிந்துரை அளிப்பதும் ஒன்றாகும்.
மாநிலங்களால் எந்த அளவிற்குக் கடன் மற்றும் பற்றாக்குறை அளவுகளை சமாளிக்க முடியும்; உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் அதிகரிப்பது; பங்கு, செயல்திறன், வெளிப்படைத்தன்மை ஆகிய கோட்பாடுகளின்படி வழி நடப்பது ஆகிய அனைத்தையும் கணக்கில் கொண்டு இந்தப் பரிந்துரைகள் அளிக்கப்படவேண்டும்
இந்தக் குறிப்பு விதிமுறைகளின்படி பதினைந்தாவது நிதிஆணையம் மத்திய அரசின் நிதிநிலை ஒருங்கிணைப்புத் திட்டமிடலுக்காக செய்வதற்காக, 18 மார்ச் 2020 அன்று 15வது நிதி ஆணையத்தின் தலைவர் என்.கே.சிங் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. 15வது நிதிஆணையத்தின் 2020- 21ஆம் ஆண்டுக்கான அறிக்கை மீது, மத்திய அரசு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளது.
2021- 22 முதல் 2025- 26 ஆண்டு வரையிலான காலத்திற்கு அரசுக்கான பொது நிதிநிலை ஒருங்கிணைப்புக்கான திட்ட வரைபடத்தைத் தயார் செய்வது என்பதும் 15வது நிதிஆணையத்தின் ஒரு பணியாகும். பெருந்தொற்று பரவியுள்ளதன் காரணமாக நிலவும் அசாதாரணமான சூழலையடுத்து, இந்தப் பணி மிகவும் சிக்கலானதாக ஆகியுள்ளது. இது தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு நிதி கட்டாயங்கள் ஏற்பட்டுள்ளன.
நிலைமைக்கேற்ப செயல்பட்ட மத்திய அரசு, மாநில அரசுகள் வழக்கமாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய GDP யின் மூன்று சதவிகிதக் கடன் தொகையை விடக் கூடுதலாக இரண்டு சதவிகிதம் அதிகமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT