Last Updated : 20 May, 2020 04:43 PM

 

Published : 20 May 2020 04:43 PM
Last Updated : 20 May 2020 04:43 PM

சுருங்கும் உலகப் பொருளாதாரம்: அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து 16பில். டாலர் முதலீட்டை வாபஸ் பெற்றனர்

கரோனா வைரஸ் எனும் அனைத்துலக மக்கள் பெருந்தொற்று காரணமாக சரிவடைந்த பொருளாதாரத்தைத் தொடர்ந்து அயல்நாட்டு முதலீட்டாளர்கள் வளரும் ஆசியப் பொருளாதாரத்திலிருந்து 26 பில்லியன் டாலர்கள் முதலீட்டை வாபஸ் பெற்றனர், இந்தியாவிலிருந்து 16 பில்லியன் டாலர்கள் முதலீடு வாபஸ் பெறப்பட்டது.

ஜெர்மனி, பிரான்ஸ், யுகே, ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளில் 3 கோடிக்கும் மேற்பட்டோர் வேலையை இழந்து அரசு உதவிக்காக விண்ணப்பித்துள்ளனர். 2020 முதல் காலாண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.8% சுருங்கியது. 1995க்குப் பிறகு இத்தகைய பொருளாதார வீழ்ச்சியை ஐரோப்பா கண்டதில்லை.

அமெரிக்காவில் முதல்கட்ட தரவுகளின் படி முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 4.8% சரிவடைந்துள்ளது. 2008 உலக பொருளாதார நெருக்கடி சரிவைக் காட்டிலும் இது அதிகம் என்கின்றன புள்ளி விவரங்கள்.

அதாவது பொருளாதார நெருக்கடிகள், கரோனா சிகிச்சை, வாக்சைன்கள், மருந்துகளுக்கான முதலீடு ஆகியவை காரணமாக தற்காப்பு கொள்கைகள் தற்சார்பு கொள்கை என்பதாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது ஒருங்கிணைந்த பன்னாட்டு செயல்பாடு தேவை என்ற குரல்களுக்கும் தேசியவாதக் கொள்கைகளுக்கும் இடையே உறவுகள் முறிந்து வருகின்றன.

கொள்கை வித்தியாசங்களினால் வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்குமான உறவுகள் பாதிக்கப்படுகின்றன. கரோனா வைரஸினால் உலகின் பெரிய பெரிய பொருளாதாரங்கள் சரிவடையும் போது இந்தியா, இந்தோனேசியா, சீனாவில் மட்டும் மிகச்சிறிய அளவிலான வளர்ச்சி தென்படுகிறது.

கரோனா தொற்றினால் நிச்சயமற்ற நிலை தொடர்வதால் உலகப் பொருளாதார மீட்சி என்பது கணிக்கப்பட்டதை விட பலவீனமாகவே இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளில் முதல் காலாண்டில் தொழிற்சாலை உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது. ஜப்பான் உள்ளிட்ட சீன வேளாண் பொருட்கள் ஏற்றுமதி குறைப்பால் சில பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x