Published : 15 May 2020 04:26 PM
Last Updated : 15 May 2020 04:26 PM

ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் வசதிக்காக வாட்ஸ் ஆப் எண் அறிமுகம்

சென்னை

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தொழில், வர்த்தகத் துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நீக்குவதற்காக, வரி செலுத்துபவர்களுக்கு கூடுதல் தகவல் தொடர்பு சேனலாக தனிப்பட்ட வாட்ஸ் ஆப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஜிஎஸ்டி GST இன் மத்திய அதிகார வரம்பிற்குட்பட்ட வரி செலுத்துபவர்களும், பொதுமக்களும் இந்த வாட்ஸ் ஆப் வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தங்களுக்கான அதிகார வரம்பிற்குட்பட்ட அலுவலகங்களை நேரில் சென்று அணுகாமலேயே வாட்ஸ் ஆப் எண் மூலமாகவே, தங்களுக்குள்ள குறைகளுக்கும், வினாக்களுக்கும் விரைவில் தீர்வு காண முடியும்.

வாட்ஸ் ஆப் எண் 94444 02480

இந்த எண் மூலம் வாட்ஸ் ஆப் செய்திகள் மட்டுமே அனுப்பமுடியும். அழைப்பு விடுத்து பேசும் வசதி நீக்கப்பட்டிருக்கும் இந்த அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரி ஒற்றைச்சாளர மைய அதிகாரியாகச் செயலாற்றி, அந்தந்த அதிகார வரம்பிற்குட்பட்ட அதிகாரியிடமிருந்து பதில்களைப் பெற்று வாட்ஸ் ஆப் மூலம் பதில் அனுப்புவார்.

அனைத்து தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளும், கூட்டமைப்புகளும், இத்துறையின் இந்தப் புதிய முயற்சி குறித்து, தங்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் அளிக்கவேண்டும் என்றும், அவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x