Published : 12 May 2020 03:04 PM
Last Updated : 12 May 2020 03:04 PM

குறு, சிறு தொழில்கள் மேம்பாட்டுக்கு புதிய இணையதளம் தொடக்கம்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் www.Champions.gov.in என்ற சாம்பியன்ஸ் இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.

இது தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் மேலாண்மை நடைமுறையாக இருக்கும். நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நடைமுறை, தேசிய மற்றும் உலகளாவிய சாம்பியன்ஸ் என்ற நிலையை நோக்கிய நகர்வில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகத்துக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்பது உருவாக்கம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நவீன நடைமுறைகளை இணக்கத்துடன் பயன்படுத்தி தேசத்தை வலுப்படுத்துவது என்பதைக் குறிப்பதாக இருக்கிறது. எனவே இந்த நடைமுறை சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்று குறிப்பிடப் படுகிறது.

சிறிய தொழில் பிரிவுகளின் குறைகளைத் தீர்த்து வைத்து, ஊக்குவிப்பு, ஆதரவு, உதவிகள் அளித்து, கைபிடித்துத் தூக்கிவிடும் செயல்பாடுகள் மூலம் அவற்றைப் பெரிய நிறுவனங்களாக ஆக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இணையதளம் செயல்படும். குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் கையாளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் இணையதளமாக இது இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x