Published : 06 May 2020 07:56 AM
Last Updated : 06 May 2020 07:56 AM
ஊரடங்கால் நாடு முற்றிலும் முடங்கியதால் இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 2 முதல் 4 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக பேங்க் ஆஃப் அமெரிக்கா கணித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாகஅமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாடுமுழுவதும் தொழில் நடவடிக்கைகள்முடங்கியுள்ளன. இதனால் வங்கிகளில் வாங்கிய கடன்களை தொழில் நிறுவனங்களும், மக்களும் குறிப்பிட்ட காலத்தில்திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு குறைவு.இதனால் வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கும். குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 2 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கும்.
வங்கிகளின் இந்த வாராக்கடன் அதிகரிப்பை சமாளிக்க அரசு அவற்றுக்கு மறுமூலதனம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். கிட்டதட்ட 15 பில்லியன் டாலர் அளவுக்கு மறுமூலதனம்செய்யவேண்டி வரலாம். இதனை பத்திரங்கள் வெளியிடுவதன் மூலமாகவோஅல்லது ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் தொகையில் இருந்தோ வழங்க அரசு திட்டமிடலாம். ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் தற்போது 127 பில்லியன் டாலராக உள்ளது.
ஏற்கெனவே அரசின் வரி வருவாய்குறைந்திருக்கிறது, பங்குவிலக்கல் மூலமான நிதித் திரட்டலும் குறைந்திருக்கிறது. மேலும் மக்கள் நிவாரண திட்டங்களுக்கும் செலவிட வேண்டியிருக்கிறது. இதனால் அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 2 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மறுமூலதன பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் திரட்டப்படும் நிதியை வங்கிகள் பயன்படுத்தும். பின்னர் அரசு இந்தபத்திரங்களை வழக்கமான அரசு கடன் பத்திரங்களாக மாற்றி சந்தையில் விற்பனை செய்யும். இந்தப் பத்திரங்களால் ஏற்படும் வட்டி சுமையை வங்கிகள் தங்கள் லாபத்தை அரசிடம் பகிர்வதன் மூலம் சமாளிக்கலாம்.
அரசின் நிதிப் பற்றாக்குறை சுமையைக் குறைக்க பத்திரங்கள் வெளியீடும்,ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் தொகையும்தான் இப்போதைக்கு தீர்வாக முன்வைக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT